99x நிறுவனம் தனது மூலோபாய வளர்ச்சியைச் சுட்டிக்காட்டும் வகையில், கொழும்பில் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட வட்டமேசை கலந்துரையாடலில் தனது சர்வதேச அடிச்சுவட்டை விஸ்தரித்துள்ளது.
சர்வதேச மென்பொருள் வடிவமைப்பு பொறியியல் நிறுவனமான 99x, கொழும்பு 03 இல் அமைந்துள்ள தனது அலுவலக வளாகத்தில், உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட வட்டமேசை கலந்துரையாடல் நிகழ்வொன்றை நடாத்தியது.
இந்தக் கலந்துரையாடல் ‘Poised for Growth in Europe and Americas’ என்ற தலைப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நோர்வே, போர்த்துக்கல், பிரேசில் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 99x இன் தொழிற்துறை தலைவர்களை இந்த மாநாடு ஒன்றுதிரட்டியதுடன், முன்னோக்கு சிந்தனை கொண்ட சர்வதேச தொழில்நுட்ப முன்னிலை நிறுவனம் என்ற வகையில் 99x இன் வளர்ச்சி தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
99x இன் சர்வதேச தலைமைத்துவ அணியின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடல் நிகழ்வில், உள்நாட்டு ஊடக பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.
நோர்வே 99x குழுமத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ஓட்-ஸ்வியர் ஒஸ்லி, நோர்வே 99x குழுமத்தின் குழும பிரதம நிதி அதிகாரி ட்ரைக்வே மோ, போர்த்துக்கல் Cleverti இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கார்லோஸ் குடின்ஹோ சில்வா, பிரேசில் Nextly இன் பிரதம நிறைவேற்று அதிகாரி தியர்ஸ் சான்டோஸ், நோர்வே Seeds Consulting இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஐலிவ் மேல் லிஜேவிக் மற்றும் நோர்வே, மலேசியா, பிரேசில் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயங்கும் 99x Technology இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசித் யக்கஹவிட்ட ஆகியோரும் கலந்துகொண்டவர்கள் மத்தியில் இடம்பெற்றனர்.
சர்வதேச அளவில் விஸ்தரிப்பை மேற்கொள்ளும் இலக்குடன், வழங்குகின்ற சேவைகளை மேம்படுத்தி, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி மட்டத்தை முன்னெடுப்பதற்காக சர்வதேச திறமைசாலிகளின் அனுகூலத்தைப் பயன்படுத்தி, 99x குழுமத்தினுள் ஒத்துழைப்பு முயற்சிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான மேடையை இந்நிகழ்வு வழங்கியுள்ளது.
மேலும், புத்தாக்க மூலோபாயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கணிசமான முதலீடுகளைத் தொடர்ந்து 99x முகங்கொடுத்துள்ள விரைவான வளர்ச்சி தொடர்பிலும் இக்கலந்துரையாடல்களின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த முதலீடுகள் நாட்டிற்குள் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்த்துள்ள மட்டுமன்றி, ஏனைய நிறுவனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்திய வளர்ச்சியின் மீது அர்ப்பணிப்புடைய நிறுவனம் என்ற ஸ்தானத்தில் 99x இனை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது 99x Technology இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசித் யக்கஹவிட்ட இலங்கையில் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகின்ற முதலீடுகளை சுட்டிக்காட்டியதுடன், இப்பிராந்தியத்தில் கிடைக்கின்ற திறமைசாலிகள் மற்றும் ஆற்றல்களின் ஆழத்தையும் வலியுறுத்தி கருத்து வெளியிடுகையில்,
“நோர்வே, போர்த்துக்கல் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலுள்ள எமது அலுவலகங்களிலிருந்து தலைமைத்துவ அணிகள் கொழும்பிற்கு வருகை தந்துள்ளதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். எமது குழுமத்தினுள்ளே காணப்படும் திறன்கள், தகுதிகள் மற்றும் அனுபவம் ஆகியன எமது சேவைகளை புதிய சந்தைகளுக்கு விஸ்தரித்து, எமது சேவைகளின் வரம்பையும் விரிவாக்குவதற்கு எமக்கு இடமளிக்கும். எமது சந்தைகளில் மிகவும் போட்டி நிலவுகின்றமைக்கு மத்தியிலும், எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் ஆற்றல்கள் மற்றும் கருவிகள் மூலமாக எமது மதிப்புக் கூட்டலை நாம் தொடர்ந்து மேம்படுத்துவோம்,” என்று குறிப்பிட்டார்.
நோர்வே 99x குழுமத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ஓட்-ஸ்வியர் ஒஸ்லி, நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்து வெளியிடுகையில்,
“99x குழுமமானது கடந்த சில ஆண்டுகளாக பூகோளவியல் உள்ளடக்கம் மற்றும் சேவை வழங்கல்கள் ஆகிய இரு கோணங்களிலும் வளர்ச்சி கண்டுள்ளது. நாம் வழங்கும் சேவைகளில் மென்பொருள் பொறியியல் அணிகள், டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் கடல்கடந்த சேவைகள் ஆகியன உள்ளடங்கியுள்ளன.
தொழிற்துறை போக்குகளை விடவும் முன்னிலையில் திகழ்ந்து, சந்தையில் மாற்றமடைந்து வருகின்ற தேவைகளை நிறைவேற்றி, எமது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதற்காக எமது சர்வதேச நிபுணத்துவத்தின் அனுகூலத்தைப் பயன்படுத்துவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். பூகோளவியல் ரீதியாக எமது பிரசன்னத்தின் விஸ்தரிப்பானது, பரந்த அளவில் திறமைசாலிகளை எட்டி, உலகளாவிய எமது வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவுமுறைகளை வளர்ப்பதற்கு எமக்கு இடமளிக்கும்,” என்று குறிப்பிட்டார்.
99x குழுமம், ஸ்கன்டிநேவியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு தனது பிரசன்னத்தை விஸ்தரிக்கும் நோக்குடன், சர்வதேச அணிகள் மத்தியிலிருந்து திறமைசாலிகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் இந்த குழு மட்ட கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. உள்நாட்டு திறமைசாலிகள் மற்றும் திறன்களின் ஆழத்தின் அனுகூலத்துடன், இலங்கையில் தொழிற்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக ஒத்துழைப்புக்களின் சாத்தியங்கள் குறித்தும் இவ்விஜயத்தின் போது குறிப்பாக ஆராயப்பட்டது. மேலும், விற்பனை மற்றும் தீர்வு கட்டமைப்பில் எதிர்கால ஒத்துழைப்புக்களுக்கான வாய்ப்புக்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
நோர்வே நாட்டில் தலைமையகத்தைக் கொண்டுள்ள 99x ஆனது மென்பொருள் வடிவமைப்பு பொறியியலில் சர்வதேச முன்னிலையாளராக தனது ஸ்தானத்தை ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் முன்னிலை வகிக்கும் சுயாதீன மென்பொருள் வழங்குனர்களுடன் (Independent Software Vendors -ISVs)ஒத்துழைப்புக்கள் மூலமாக வடிவமைக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த டிஜிட்டல் தீர்வுகளை வழங்கிய சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ள 99x குழுமம், இலங்கை, பிரேசில், நோர்வே, போர்த்துக்கல் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் வடிவமைப்பு வல்லுனர்கள் அணியைக் கொண்டுள்ளது. அவர்களுடைய நிபுணத்துவம், படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைக்கும் உணர்வு ஆகியன டிஜிட்டல் மென்பொருள் துறையில் புத்தாக்கத்தையும், மகத்துவத்தையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு வழிவகுத்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM