சுற்றுலா துறை என்பது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் போதிய அளவு வேலைவாய்ப்புகளை உள்ளடக்கி துரிதகதியில் வளர்ச்சி கண்டுவரும் துறையாக காணப்படுகின்றது. 

சிறந்த அறிவுத் திறனுள்ள ஊழியர்களுக்கு உள்ளாட்டிலும் வெளிநாடுகளிலும் போட்டித்தன்மை நிலவுவதுடன் இத்துறைக்குள் பிரவேசிப்பதற்கான இலகுவாக அனுமதியும் கிடைக்கின்றது. 

‘வேலைவாய்ப்புத் திறனில் போட்டித்தன்மை மற்றும் திறமை மிக்க மாணர்வகளை உருவாக்குதல்’ என்பது தொடர்பான உலக வங்கியின் அறிக்கையின்படி இலங்கை இந்த விடயத்தில் குறுகிய வட்டத்திற்குள் தற்போது இருப்பது தெரியவந்துள்ளது.

 அந்தவகையில் அதிகளவிலான முதலாளிகள் எதிர்பார்ப்பதுபோல அவசியமான முக்கிய பண்புகளில் ஒன்றாக காணப்படும் போதிய அறிவுசார்ந்த பட்டதாரிகள் உருவாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போதும் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதற்கு தீர்வளிக்கும் வகையில் TRAc இன்டர்நெஷனல், நிறுவனமானது விருந்தோம்பல் துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்சி நிறுவனமாக அத்துறையில் அதிக அக்கறை கொண்டு இந்நிலையை மாற்றிட உத்தேசித்துள்ளது. 

உலகளாவிய ரீதியில் போட்டிமிக்க இத்துறையில் திறமையான மாணவர்களை உருவாக்கி இத்துறையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். தொழில்வாய்ப்பு ரீதியில் இத்துறையானது மிகவும் பரந்தளவில் காணப்படுகின்றது.

விருந்தோம்பல் தொழிற்துறையை பொருத்தமட்டில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற நடத்தை மாற்றங்கள், சிறந்த செயற்திறன், நடைமுறைகேற்ற தகமைகள் போன்றவை மிக முக்கியமாகின்றன. TRAc ஆனது இப்படியான முழுமையாக திறன்சார் பயிற்சி மிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திறமையான பயிற்றுனர்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் இவர்களின் ஊடாக உலக நாடுகள் மற்றும் உள்நாட்டிலுள்ள ஹோட்டல்கள், விருந்தினர் தங்குமிடங்கள், மற்றும் வில்லாக்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சந்தையில் அவசியப்படும் முழுமையான பயிற்சிகளை வழங்கிவருகின்றது. 

மேலதிக பயிற்சி, மறு பயிற்சி, தொழில் பயிற்சி, வேலை வாய்ப்பு சலுகைகள் மற்றும் மானிய திட்டங்கள் என்பன இவ்விருந்தோம்பல் பயிற்சி கொள்கைகளுக்குள் அடங்குபவையாகும். TRAc பயிற்சி நிறுவனமானது நிலையான தொழில்துறை, மேம்படுத்தப்பட்ட தொழில்துறை மற்றும் தொழில்துறையின் ஸ்தீரத்தன்மை என்னும் மூன்று விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. 

நிரந்தர தொழில் இல்லாமல் பாதிக்கப்படுவோர் தொடர்பிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்துவதோடு வாழ்க்கை மற்றும் திறன் அபிவிருத்தி பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர தொழில் வாய்ப்பினையும் வழங்குகின்றது. 

விருந்தோம்பல் துறையில் பணியாற்றுவதன் முக்கியத்தவம் பற்றி TRAc நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி நடாஸா பேர்கன்விக் கருத்துதெரிவிக்கையில்,

“நாம் விருந்தோம்பல் துறையிலுள்ள சந்தைப்படுத்தல் திறன்களை மென்மேலும் வளர்த்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தில் காணப்படுகின்றோம். காரணம், இலங்கையில் மற்றும் வெளிநாடுகளிலுள்ள அதிகமான ஹோட்டல்களில் கடமையாற்றும் பட்டதாரிகள் போதிய பயிற்சி மற்றும் தகுதியில்லாத காரணத்தினால் நம்பிக்கை இழந்து மனம்தளர்ந்து போகின்றனர். ஆனால் வளர்ச்சி கண்டுவரும் ஹோட்டல் துறையைப் பொருத்தமட்டில் ஹோட்டல் துறையில் தேவைப்படும் சாதாரணமான திறன் முதல் தொடர்பாடல் போன்ற அதிமுக்கியமான திறன் வரையான அறிவும் அதன் அவசியங்களையும் தற்போதைய மாணவர்கள் நன்கு அறிந்துவைத்துள்ளனர். 

ஆராய்ச்சி இன்டர்ன்ஷிப் அடிப்படையின்படி, மென் திறன் திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் மென் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளும் முறையில் இருத்தல் வேண்டும். 

இன்றைய காலகட்டத்தில் தொழில்வழங்குனர்கள் அடிப்படை அறிவிலும் பார்க்க அதிகமான திறன்களை எதிர்பார்க்கின்றனர். தற்போதைய போட்டிமிக்க சந்தை நிலமைகளின்படி செயல்முறை வேலை தொடர்பான திறமைகளும் அவசியப்படுவதுடன் மென் திறன்களின் அவசியமும் மிக முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. ஆனாலும், இவை எப்போதுமே தேவைப்படாது என்றாலும், திறமை மற்றும் அனுபவம் மிக்கவர்களுக்கு தொழில்வழங்குனர்களிடமிருந்து முன்னுரிமை வழங்கப்டுகின்றன. TRAc இல் தனிநபர்கள் அல்லது நிறுவங்கள் இரு வகையான தேவைகளைக் கருத்திற்கொண்டு பயிற்றுவிக்கப்படுகின்றனர். 

குறுகிய கால தேவைகளானதுரூபவ் பொதுத்தேவைகள் மற்றும் திறமைகளை வளர்த்தல் போன்ற விடயங்களை உருவாக்கிட உதவுவதுடன் நீண்ட கால தேவைகளானது, தனிநபர்களுக்கு பொருத்தமான வேலைகளை பெற்றுக்கொடுப்பதில் கவனம்செலுத்தப்படுவதுடன் இதில் நிலையான மாற்றங்களும் தேவையின்படி மேற்கொள்ளப்படும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

TRAc இனால் புதியோருக்கான பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி ஆகியன இரு வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. புதிய பயிற்சி நெறிகளானது விருந்தோம்பல் துறையிலுள்ள பல்வேறு பிரிவுகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட தனித்துவமான பயிற்சி நெறிகள் வழங்கப்படுகின்றன. 

இத்தொழில் பயிற்சியானது கைவினைசார் பயிற்சிகளை உள்ளடக்கியதாக அமைகின்றது. குறிப்பாக உணவு மற்றும் பானம், உணவக சேவை,பார்,முன் அலுவலகம் மற்றும் வீட்டுப் பணி மற்றும் ஆங்கிலம்ரூபவ் வாடிக்கையாளர் சேவை மற்றும் விருந்தோம்பல் துறைக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட தொடர்பாடல் பாடநெறிகள் இதில் உள்ளடக்கப்படுகின்றன. 

2011 ஆம் R. Polziehn இனின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி தொடர்பாடல் மற்றும் தனிப்பட்ட திறமைகள் ஆகியனவே மிகமுக்கியமான திறமைகள் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நுழைவு அளவிலான தொழில்களுக்கு தொடர்பாடல் மிகவும் இன்றிமையாத மற்றும் அவசியமான திறமையாகும் என்பது 2015 ஆம் ஆண்டு A.C. Williams இனால் மீண்டும் நிரூயஅp;பிக்கப்பட்டன. மாணவர்கள் தங்களது பயிற்சிகள் மற்றும் இன்டர்ஷிப் பாடத்திட்டங்களை நிறைவுசெய்து சான்றிதழ்களை பெற்றதும் TRAc ஆனது அவரவர் திறமைகளை சரியாக இனங்கண்டு நாட்டிலுள்ள முன்னணி ஹோட்டல்களில் அவர்களுக்கு சிறந்த ஊதியத்துடன் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

TRAc இல் பயிற்சி பெறும் மாணவர் ஒருவர் “அத்தியாவசிய கடின திறன்களுக்கு மேலதிகமாக இப்பாடத்திட்டமானது வாடிக்கையாளர்களுடன் தொடர்பாடல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் முறை ஆகியவற்றினால் எப்படி அணுகுவது என்பதனை கற்றுத்தந்துள்ளதுடன் இவற்றை எனது இன்டர்ஷிப்பின்போது பயன்படுத்தி பயனடைந்தேன். 

இது தொழிலுக்கு இணைவதற்கு பெரிதும் துணை புரியும்” என்று தெரிவித்தார். திறன் அபிவிருத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் அவசியத்தை நன்கு அறிந்துள்ள TRAc நிறுவனமானது, நிலையான தொழில் தகமைகளுக்கு இது பெரிதும் துணை புரியும் என்பதை நிரூபனம்செய்கின்றது. 

மேலும் சர்வதேச தரத்தில் அங்கீகரிக்கப்பட்ட தரமான முறையில் பயிற்சிநெறிகள் மேம்படுத்தப்படுகின்றமை சிறந்த கல்விநெறிக்கான முன் உதாரணங்களாகும். இதுவே தனிப்பட்ட நபர் சர்வதேச தரம்வாய்ந்த விருந்தோம்பல் கற்கைநெறியை பயின்றிட சிறந்த இடம் TRAc என்பதற்கான ஓர் பெரும் எடுத்துக்காட்டாகும்.

மேலதிக விபரங்களுக்கு 011 4326443 இனூடாக TRAc இற்கு அழைக்கவும் அல்லது www.trac-learning.comஇணையத்தை நாடவும்.