நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

20 Jun, 2024 | 05:18 PM
image

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (20) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்திபூர்வமாக நடைபெற்றது.

இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரதோற்சவம் இன்று காலை வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமானது.

நாகபூசணி அம்மனுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, மூன்று மூர்த்திகளும் உள்வீதி, வெளி வீதி எழுந்தருளி தனித்தனி தேரிலே ஏற, முத்தேர் பவனியாக இரதோற்சவம் நடைபெற்றது. 

16 தினங்களை கொண்ட ஆலய மஹோற்சவம் கடந்த 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

இன்றைய இரதோற்சவத்தை தொடர்ந்து நாளை (21) தீர்த்தோற்சவமும் நாளை மாலை திருவூஞ்சலும் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை இரவு பூங்காவனத் திருவிழாவும் மறுநாள்  ஞாயிற்றுக்கிழமை (23) தெப்போற்சவம் நடைபெறவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏ.கே.எஸ். ஆடையகம் கிரிக்கெட் வீரர் சனத்...

2024-07-13 12:57:19
news-image

தமிழில் தேசிய கீதம் பாடிய திருகோணமலையின்...

2024-07-13 13:42:12
news-image

உலகளாவிய கொந்தளிப்புகளுக்கு மத்தியில், குடிமக்கள் சமாதானத்துக்காக...

2024-07-11 14:32:03
news-image

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை...

2024-07-10 17:48:55
news-image

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப்...

2024-07-10 17:35:11
news-image

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்'...

2024-07-09 17:57:31
news-image

தெஹிவளை - கல்கிசை நகர்புற கடற்கரையை...

2024-07-09 17:58:24
news-image

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய...

2024-07-09 17:55:16
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா

2024-07-09 11:22:11
news-image

முன்னாள் இராணுவத்தளபதி ஸ்ரீநாத் வீரசூரிய எழுதிய...

2024-07-08 17:39:28
news-image

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் (WTCC)...

2024-07-08 17:57:42
news-image

சிறப்பான அரங்கேற்றம் மகிழ்வு தந்தது

2024-07-06 23:03:25