வெற்றிமாறன் - விமல் - போஸ் வெங்கட் கூட்டணியில் தயாராகி இருக்கும் 'சார்'

Published By: Digital Desk 7

20 Jun, 2024 | 05:03 PM
image

தமிழ் திரையுலகில் சந்தை மதிப்பு கொண்டிருக்கும் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சார்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி மற்றும் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

'கன்னி மாடம்' எனும் படத்தை இயக்கிய இயக்குநரும், நட்சத்திர நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சார்' எனும் திரைப்படத்தில் விமல், சாயாதேவி கண்ணன், சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இனியன் ஜே. ஹாரீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார்.  அரசாங்க பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். சிராஜ் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன் வழங்குகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்தத் திரைப்படத்திற்கு முதலில் 'மா பொ சி' என பெயரிட்டிருந்தனர். இதற்கு மறைந்த தமிழறிஞர் மா. பொ சி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே படத்தின் தலைப்பை 'சார்' என மாற்றினர்.

இந்தப் படத்தின் டீசரில் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை அளிக்கும் பாடசாலையை இடித்து தள்ள அக்கிராமத்தில் வாழும் ஆதிக்க சாதியினர் முயற்சிப்பதும் அதனை அந்தப் பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்கும் ஆசிரியரான நாயகன் எதிர்ப்பதுமான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும், டீசரின் தொடக்கத்தில் ' என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது. அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே முடியும்' எனும் தத்துவஞானி சாக்ரடீசின் மேற்கோள் இடம் பிடித்திருப்பதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ்...

2025-06-20 22:02:56
news-image

புதுமுக நடிகர் வினோத் நடிக்கும் '...

2025-06-19 16:58:11
news-image

திரைப்படமாகும் சாம்பாராக் இசையின் பிதாமகன் டார்க்கி...

2025-06-19 16:57:42
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'காயல் '...

2025-06-19 16:35:31
news-image

டொம் க்ரூஸூக்கு ஒஸ்கார் விருது 

2025-06-19 15:36:01
news-image

அனிருத் வெளியிட்ட 'ஓஹோ எந்தன் பேபி...

2025-06-18 16:59:54
news-image

'மெட்ராஸ் மேட்னி' படத்திற்கு தொடர்ந்து ஆதரவு...

2025-06-18 16:18:04
news-image

அறிவியல் சார்ந்த குற்ற புலனாய்வு வகைமையில்...

2025-06-18 15:49:45
news-image

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ்...

2025-06-18 11:06:34
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் இணைந்த...

2025-06-17 16:33:32
news-image

டிஸ்னி- பிக்ஸார் நிறுவனத்தின் 'எலியோ' படத்தின்...

2025-06-17 16:02:32
news-image

விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு...

2025-06-17 16:02:06