நடிகர் நவீன் சந்திரா நடிக்கும் 'லெவன்' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 7

20 Jun, 2024 | 04:35 PM
image

தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் நவீன் சந்திரா கதையின் நாயகனாக கம்பீரமான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் 'லெவன்' எனும் திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லெவன்' எனும் திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி,  சஷாங்க், அபிராமி, திலீபன், ரித்விகா, 'ஆடுகளம்' நரேன், ரவிவர்மா, அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கொலை வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து கொலையாளியை கண்டறியும் ரஞ்சித் குமார் என்னும் காவல்துறை அதிகாரி வேடத்தில் கதையின் நாயகனாக நவீன் சந்திரா தோன்றுகிறார். அவருக்கு சவாலை அளிக்கும் கொலை வழக்கு ஒன்றை துப்பு துலக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக இடம் பிடித்திருப்பதால் இந்த டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39
news-image

வெளியீட்டு திகதியை அறிவித்த விஜய் ஆண்டனியின்...

2024-07-11 18:06:45
news-image

சுசீந்திரன் இயக்கும் '2 K லவ்...

2024-07-11 18:06:33
news-image

அமீர் - சமுத்திரக்கனி தொடங்கி வைத்த...

2024-07-11 18:06:14
news-image

வெங்கட் பிரபு வழங்கும் 'நண்பன் ஒருவன்...

2024-07-11 18:06:00
news-image

யூரோ 2024 :16 வயதில் கோல்...

2024-07-11 12:47:35
news-image

விஜய் சேதுபதி - சூரி இணைந்து...

2024-07-10 17:26:26
news-image

ஆகஸ்டில் வெளியாகும் திரிஷாவின் முதல் இணைய...

2024-07-10 17:41:46
news-image

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்...

2024-07-10 17:25:00
news-image

இருட்டு அறையில் முரட்டு தேவதையாக மிரட்டும்...

2024-07-10 16:48:46