கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் - திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

20 Jun, 2024 | 03:01 PM
image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தைந்தாக உயர்ந்திருக்கிறது. கள்ளச்சாராயம் அருந்தி மக்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் கள்ளச்சாராய வணிகர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு  நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது.

கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி,  கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த  நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு  கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது.  மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது.

கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை  தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான். இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என அதில் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே இவ்விவகாரம் குறித்து சட்டபேரவையில் எதிர்கட்சிகள் நாளை கேள்வி எழுப்பக்கூடும என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதில் தர ஆளும் திமுகவும் தயாராகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக ஊடக குழு உரையாடலில் இரகசிய...

2025-03-26 14:28:31
news-image

கடவுச்சீட்டை மறந்த விமானி ; திரும்பிச்...

2025-03-26 16:10:30
news-image

கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும்...

2025-03-26 13:57:31
news-image

போரில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அதிர்ச்சியடைநத நிலையில்...

2025-03-26 12:21:38
news-image

பேஸ்புக்கை முடக்கியது பப்பு வா நியூ...

2025-03-26 12:37:46
news-image

தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின்...

2025-03-26 10:22:22
news-image

ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2...

2025-03-26 09:37:56
news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26
news-image

நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

2025-03-25 10:38:38
news-image

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும்...

2025-03-25 11:48:44