(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
மொத்த சனத்தொகையில் 52 சதவீதம் பெண்கள் வாழ்கின்ற நிலையில் 12 பெண் பிரதிநிதிகள் மாத்திரம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்வது கவலைக்குரியது.அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு பெண்களை நியமிக்க வேண்டும்.பாராளுமன்றம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
யுனேஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கல்வி சார் துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்.இந்த ஆணைக்குழுவுக்குள் கலாசார நிதியம்,வனஜீராசிகள் மற்றும் வனபாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.அத்துடன் ஆணைக்குவின் கூட்ட நடப்பெண் 09 ஆக காணப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம்.எமது பரிந்துரைகளை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.
பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் பற்றி பேசப்படுகிறது.சமூக கட்டமைப்பில் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதமளவில் பெண்கள் உள்ளார்கள்.இருப்பினும் பெண்களுக்கான முன்னுரிமை வரையறுக்கப்பட்டதாக காணப்படுகிறது.
பாராளுமன்றத்தில் 12 பெண் பிரதிநிதிகள் மாத்திரமே உள்ளார்கள்.50 ஆண்டுகளுக்கு முன்னரும் குறைவான பிரதிநிதித்துவமே காணப்பட்டது.தற்போதைய நிலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படவில்லை.அரச மற்றும் தனியார் உயர் பதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.பாராளுமன்ற செயலாளர் நாயகமாக பெண் ஒருவர் பதவி வகிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.ஏனைய அரச தாபனபங்கள் இதனை ஒரு எடுத்துக்காட்டாக கருத வேண்டும்.
பெருந்தோட்ட பகுதிகளில் 50 சதவீதமளவில் பெண்கள் உள்ளார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள்.தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.பலர் உயிரிழந்துள்ளார்கள்.
நாட்டின் மொத்த ஊழியர் படையில் பெண்களின் பங்களிப்பு வரையறுத்ததாக காணப்படுகிறது.அரச துறையில் 5 இலட்சத்து 95 ஆயிரத்து 143 பெண்கள் பணிபுரிகிறார்கள்.தனியார் துறையில் 1 கோடியே 74 ஆயிரத்து 607 பெண்களும், சுய தொழில்துறையில் 7 இலட்சத்து 3 ஆயிரத்து 290 பெண்களும் பணிபுரிகின்றனர்.பெருந்தோட்டத்துறையில் 1 இலட்சத்து 70 ஆயிரத்து 786 பெண்கள் பணிபுரிகிறார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்வோரின் வீதம் உயர்வடைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு 21211 பெண்களும்,2021 ஆம் ஆண்டு 41154 பெண்களும்,2022 ஆம் ஆண்டு 1 இலட்சத்து 24901 பெண்களும் வீட்டு பணிப்பெண்களாக சென்றுள்ளார்கள்.பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.ஆகவே நாடளாவிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் பிள்ளைகள் பராமரிப்பு மத்திய நிலையங்களின் சேவைகளை ஸ்தாபிக்க வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM