இந்திய துடுப்பாட்டத்துக்கும் ஆப்கான் பந்துவீச்சுக்கும் இடையிலான போட்டி

20 Jun, 2024 | 01:23 PM
image

(நெவில் அன்தனி)

ரி20 உலகக் கிண்ண அங்குரார்ப்பண அத்தியாயத்தில் (2007) சம்பியனான இந்தியாவை குழு 1க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் இன்று இரவு எதிர்த்தாடவுள்ளது.

பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப் போட்டி இந்தியாவின் துடுப்பாட்டத்துக்கும் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சுக்கும் இடையிலான போட்டியாக அமையும் என எதிர்வு கூறப்படுகிறது.

மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்திவந்துள்ள இந்தியா, சுப்பர் 8  போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாக காணப்படுகிறது.

ஆனால், எதற்கும் துணிந்த ஆப்கானிஸ்தான், தலைகீழ் முடிவை ஏற்படுத்தக்கூடியது  என அதன் பயிற்றுநர் ஜோநதன் ட்ரொட் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் கரிபியன் தீவுகளில் இந்தியா விளையாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

குழுநிலை அல்லது முதல் சுற்றில் ஏ குழுவில் இடம்பெற்ற இந்தியா தனது முதல் 3 போட்டிகளையும் நியூயோர்க்கில் விளையாடியது.

லௌடர்ஹில்லில் நடைபெறவிருந்த கனடாவுடனான போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது.

அயர்லாந்தை இலகுவாக வெற்றிகொண்ட இந்தியா, பாகிஸ்தானுடனான போட்டியில் கடைசி ஓவரிலும் அமெரிக்காவுடனான போட்டியில் 19ஆவது ஓவரிலும் சவாலுக்கு மத்தியில் வெற்றிபெற்றது.

சி குழுவில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் 3 போட்டிகளில் உகண்டா, நியூஸிலாந்து, பப்புவா நியூ கினி ஆகிய அணிகளை மிகவும் இலகுவாக வெற்றிகொண்டது. ஆனால், கடைசிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் மோசமான தோல்வியைத் தழுவியது.

இந்த இரண்டு அணிகளும் எட்டு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன்   அவற்றில் 6 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றது. சமநிலையில் முடிவடைந்த போட்டி ஒன்றில் சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் முடிவு கிடடவில்லை.

எனினும் சுப்பர் 8 சுற்றில் இம்முறை வெற்றிபெறுவதாக இருந்தால் இந்தியா தனது முழுப் பலத்தையும் பிரயோகிக்க வெண்டிவரும். குறப்பாக முதல் சுற்றில் நியூயோர்க்கில் பிரகாசிக்கத் தவறிய விராத் கோஹ்லி இன்றைய போட்டியில் திறமையாக விளையாடுவது அவசியம். கரிபியன் தீவுகளிலுள்ள ஆடுகளங்களில் அவர் கொண்டுள்ள அனுபவங்கள் அவரை பிரகாசிக்கச் செய்யும் என கருதப்படுகிறது.

அவரை விட அணித் தலைவர் ரோஹித் ஷர்மா. ரிஷாப் பான்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் டுபே ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்குவர் என நம்பப்படுகிறது.

இந்திய பந்துவீச்சாளர்களான   ஹார்திக் பாண்டியா (7 விக்கெட்கள்), அர்ஷ்தீப் சிங் (7), ஜஸ்ப்ரிட் பும்ரா (5) ஆகியோர் ஆப்கானிஸ்தானுக்கு சிரமத்தைக் கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய துடுப்பாட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இதுவாரை யாரும் பிரகாசிக்கவில்லை.

இன்றைய போட்டியில் மேலதிக சுழல்பந்துவீச்சாளர் ஒருவரை இந்தியா இணைத்தக்கொள்ளும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் குல்தீப் யாதவ் இறுதி அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்திய அணிக்கு சவால் விடுக்கக்கூடியவர்களாக வேகப்பந்துவீச்சாளர் பஸால்ஹக் பாறூக்கியும் அணித் தலைவரும் சுழல்பந்துவீச்சாளருமான ரஷித் கானும் கருதப்படுகின்றனர்.

9ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் பஸால்ஹக் பாறூக்கி 4 போட்டிகளில் 12 விக்கெட்களை வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறார். ரஷித் கான் 6 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 5 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானின் துடுப்பாட்டமும் சிறந்த நிலையில் இருப்பதை மறந்துவிடலாகாது. ஆரம்ப வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் (167 ஓட்டங்கள்), இப்ராஹிம் ஸத்ரான் (152 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தால் அது இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும்.

எவ்வாறாயினும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதை குறியாகக் கொண்டு இரண்டு அணிகளும் விளையாடுவதால் இன்றைய போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள்

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), விராத் கோஹ்லி, ரிஷப் பான்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், குல்பாதின் நய்ப், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், மொஹமத் நபி, நஜிபுல்லா ஸத்ரான், கரிம் ஜனத், ரஷித் கான் (தலைவர்), நூர் அஹ்மத், நவீன் உல் ஹக், பஸால்ஹக் பாறூக்கி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04