ரஷ்யாவும் வடகொரியாவும் பரஸ்பரம் ஒருநாடு தாக்கப்பட்டால் மற்றைய நாடு உடனடி இராணுவ உதவியை உடனடியாக வழங்குவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வடகொரிய விஜயத்தின்போது இரு நாடுகளின் தலைவர்களும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இரண்டு நாடுகளிற்கும் இடையில் கடந்த பல வருடங்களாக கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் இதுவே மிக முக்கியமானது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த உடன்படிக்கை பனிப்போர்காலத்தின் 1961ம் ஆண்டு பரஸ்பர பாதுகாப்பு உறுதிமொழிக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் முயற்சி என சிஎன்என் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த உடன்படிக்கை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ள நாட்டுடன் வடகொரிய ஜனாதிபதியின் உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.
இரண்டு நாடுகளில் ஒரு நாடு இராணுவரீதியான நடவடிக்கையை எதிர்கொண்டால் மற்றைய நாடு உடனடியாக இராணுவ உதவியையும் ஏனைய உதவிகளையும் வழங்கவேண்டும் என உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM