ஹட்டன், அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டப்பிரிவான நெதஸ்டல் தோட்டத்தில் இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 20 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பு தொகுதியில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட இந்த வீட்டில் வசித்து வந்த குழந்தை பிறந்து சில நாட்களான தாய் உட்பட ஐவர் நிர்கதிக்கு ஆளாகியுள்ளனர்.
அதேநேரம் இந்த தீ பிடிப்பு சம்பவத்தை அறிந்த அயலவர்கள், தோட்ட பொதுமக்கள் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டதால் பாரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நிர்கதிக்கு ஆளாகியுள்ள ஐவர் கொண்ட குடும்பத்தினரை தோட்டத்தில் தற்காலிகமாக உறவினர் வீடு ஒன்றில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM