கிரிக்கெட்டில் அவ்வப்போது ஒரு சில அபூர்வ நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. இது ஒரு சில சந்தர்ப்பங்களில் பந்து வீச்சாளருக்கு பாதகமாகவும் துடுப்பாட் ட வீரரருக்கு சாதகமாகவும் அமைந்து விடுவதுண்டு. பந்து ஸ்டம்புகளுக்கிடையில் சென்றும் பேல்ஸ்கள் கீழே விழாத சந்தர்ப்பம் ஒன்று கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ளது.
இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும். 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி.
பைசலாபாத்தில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னங்ஸில் தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடியது.
98 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாபிரிக்கா. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கேரி கேர்ஸ்டனுடன் 8 ஆவது விக்கெட்டுக்காக இணைந்தார் சுழற்பந்து வீச்சாளர் பெட் சிம்கொக்ஸ். மிக வேகமாக துடுப்பெடுத்தாடினார்.
56 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமட் வீசிய பந்து ஓப் திசை மற்றும் மத்திய ஸ்டம்பின் இடையே வெளியேறியது. இதில் என்ன அதிசயம் என்றால் ஸ்டம்பிலுள்ள பேல்ஸ்கள் அசையவே இல்லை. நடுவர் ஸ்டீவ் டன்னுக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை. அதன் பிறகு தனது வழமையான துடுப்பாட்டத்தை தொடர்ந்த சிம்கொக்ஸ் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 81 ஓட்டங்களைப்பெற்றார்.
இப்போட்டியில் தென்னாபிரிக்கா 53 ஓட்டங்களால் வெற்றி பெற இவரின் இந்த இன்னிங்ஸ் பெரிதும் உதவியது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவரே தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டியில் சிம்கொக்ஸ் அதிர்ஷ்டமான ஒருவராக விளங்கியதால் ஆட்டமிழப்பிலிருந்து தப்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM