மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது ; ஸ்டாலின் சீற்றம் ; ஜெய்சங்கருக்கு கடிதம்

Published By: Digital Desk 3

20 Jun, 2024 | 11:39 AM
image

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

இலங்கைக் கடற்படையினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-08-MM-05 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 18-6-2024 அன்று கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளது. எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பாதுகாப்புப் படை வீரரை கைதுசெய்தது...

2025-04-24 21:22:34
news-image

இந்திய விமானங்களிற்கு தனது வான்எல்லையை மூடியது...

2025-04-24 17:17:11
news-image

"பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி...

2025-04-24 17:00:45
news-image

'அவர் எங்களின் கவசம் - எங்களின்...

2025-04-24 15:26:23
news-image

பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு...

2025-04-24 14:31:49
news-image

யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம்’ -...

2025-04-24 13:14:51
news-image

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி :...

2025-04-24 07:18:18
news-image

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள் - சேதவிபரங்கள்...

2025-04-23 16:37:49
news-image

துருக்கியில் பூகம்பம்

2025-04-23 16:12:35
news-image

ரஸ்யாவில் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில்...

2025-04-23 14:57:29
news-image

காஷ்மீர் தாக்குதல்: திருமணம் நடந்து 3...

2025-04-23 14:52:20
news-image

பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளிற்காக மாணவர்களை தடுத்துவைத்திருப்பது...

2025-04-23 14:03:20