ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான தாக்குதலிற்கு சைப்பி;ரசினை இஸ்ரேல் தளமாக பயன்படுத்தினால் சைப்பிரசினை இலக்குவைப்போம் என ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரெல்ல எச்சரித்துள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொள்வதற்கு சைப்பிரசின் விமானநிலையங்களையும் தளங்களையும் பயன்படுத்துவதற்கு சைப்பிரஸ் அனுமதித்தால் சைப்பிரஸ் அரசாங்கம் அந்த யுத்தத்தின் ஒரு பகுதி என்பதே அர்த்தம் என ஹெஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தனது அமைப்பு சைப்பிரசினை யுத்தத்தின் ஒரு பகுதியாகவே கையாளும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக பரந்துபட்ட தாக்குதலை மேற்கொள்வது குறித்து இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே ஹெஸ்புல்லா தலைவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
காசா போரில் ஹமாசிற்கு ஆதரவளிப்பதே ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலிய படையினரை ஒரு பகுதியில் முடக்கிவைத்திருப்பதில் வெற்றியடைந்துள்ளதாக குறி;ப்பிட்டுள்ளார்.
சைப்பிரசிற்கும் இஸ்ரேலிற்கும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM