550 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கடும் வெப்­பத்­தினால் உயி­ரி­ழப்பு

20 Jun, 2024 | 11:05 AM
image

ஆர். சேது­ராமன்

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது குறைந்­த­பட்சம் 550 யாத்­தி­ரி­கர்கள் கடும் வெப்பம் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர் என இரா­ஜதந்­தி­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

உயி­ரி­ழந்­த­வர்­களில் எகிப்­தி­யர்­களே அதி­க­மாகும். குறைந்­த­பட்சம் 323 எகிப்­திய யாத்­தி­ரி­கர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அரே­பிய இரா­ஜதந்­தி­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

மேற்­படி எகிப்­தி­யர்­களில் ஒரு­வரைத் தவிர அனை­வரும் கடும் வெப்பம் கார­ண­மாக உயி­ரி­ழந்­தனர், ஒருவர் சன­நெ­ரி­சலில் சிக்கி காய­ம­டைந்­ததால் உயி­ரி­ழந்தார் என இரா­ஜ­தந்­திரி ஒருவர் தெரி­வித்தார் என ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது.

புனித மக்கா நக­ருக்கு அரு­கி­லுள்ள அல் முவைசெம் நகரின் வைத்­தி­ய­சாலை பிரேத அறை­யி­லி­ருந்து இப்­புள்­ளி­வி­ப­ரங்கள் கிடைத்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

இதே­வேளை, உயி­ரி­ழந்த ஜோர்­தா­னிய ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்கை 60ஆக அதி­க­ரித்­துள்­ளது. 41 ஜோர்­தா­னி­யர்கள் இறந்­துள்­ளனர் என செவ்­வாய்க்­கி­ழமை ஜோர்­தா­னிய அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்­தது.

பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து கிடைத்த தர­வு­க­ளின்­படி உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 577ஆக அதி­க­ரித்­துள்­ளது என ஏ.எவ்.பி தெரி­வித்­துள்­ளது.

அதேவேளை அல்- முவைய்செம் வைத்­தி­ய­சாலை பிரேத அறைக்கு புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி 550 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என இரா­ஜந்­தி­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

ஈரான், இந்­தோ­னே­ஷியா, செனகல் நாட்­ட­வர்­களும் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

51.8 பாகை செல்­சியஸ் வெப்பம்

இவ்­வ­ருடம் 18 இலட்சம் பேர் ஹஜ் யாத்­தி­ரையில் ஈடுபட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்­களில் 16 இலட்சம் பேர் வெளி­நாட்­ட­வர்கள் ஆவர்.

கால­நிலை மாற்­றத்­தினால் யாத்­தி­ரி­கர்­களின் பாதிப்­புகள் அதி­க­ரித்­துள்­ளன. சவூதி அரே­பி­யா­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வொன்­றின்­படி, ஹஜ் யாத்­திரை சடங்­குகள் மேற்­கொள்­ளப்­படும் பிர­தே­சத்தில் ஒவ்­வொரு தசாப்­தமும் வெப்­ப­நி­லை­யா­னது 0.4 பாகை செல்­சி­ய­ஸினால் (0.72 பாகை பரனைட்) அதி­க­ரிக்­கின்­ற­னது.

கடந்த திங்­கட்­கி­ழமை (17) மக்கா பெரிய பள்­ளி­வா­சலில் வெப்­ப­நிலை 51.8 பாகை செல்­சி­ய­ஸாக (128 பாகை பரனைட்) பதி­வா­கி­யி­ருந்­தது என சவூதி அரே­பி­யாவின் தேசிய வளி­மண்­ட­ல­வியல் மத்­திய நிலையம் தெரி­வித்­தது.

இதே­வேளை, ஒவ்­வொரு வரு­டமும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாத்­தி­ரி­கர்கள், பணத்தை சேமிப்­ப­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ ஹஜ் விசா இல்­லாமல் ஹஜ் கட­மை­களை மேற்­கொள்ள முயல்­கின்­றனர். இது மிக ஆபத்­தா­ன­தாகும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஏனெனில், பதி­வு­செய்­யப்­ப­டாத யாத்­தி­ரி­கர்­களால், சவூ­தி­ அரே­பிய அதி­கா­ரிகளால் வழங்­கப்­படும் குளி­ரூட்­டப்­பட்ட தங்­கு­மி­டங்­களை அடைய முடி­யாமல் போகலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எகிப்­தி­யர்­களின் உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்கு, பதிவு செய்­யப்­ப­டாத எகிப்­திய யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­த­மையும் காரணம் என மேற்­படி இரா­ஜ­தந்­தி­ரி­களில் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

ஹஜ் யாத்­திரைக் காலத்­துக்கு முன்­ன­தாக புனித மக்கா நக­ரி­லி­ருந்து இலட்சக்கணக்­கான பதி­வு­செய்­யப்­ப­டாத யாத்­தி­ரி­கர்­களை தாம் அகற்­றி­ய­தாக சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் இம்­மாத முற்­ப­கு­தியில் தெரி­வித்­தி­ருந்­தனர்.

200 நாடுகளிலிருந்து...

ஜூன் 14 முதல் ஜூன் 19ஆம் திக­தி ­வ­ரை­யான இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை காலத்தில் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வோரின் எண்­ணிக்கை 1.8 மில்­லியன் ஆகும் என சவூதி அரே­பி­யாவின் ஹஜ் மற்றும் உம்மா அமைச்சர் தௌபீக் அல் ரபைய்ஹா கடந்த வாரம் தெரி­வித்­தி­ருந்தார்.  இவர்­களில் சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த 221,854 பேரும் அடங்­குவர்.

200 இற்கும் அதி­க­மான நாடு­க­ளி­லி­ருந்து யாத்­தி­ரிகள் வந்­துள்­ளனர் எனவும் அவர் கூறினார்.

இதே­வேளை, சவூதி அரே­பிய புள்­ளி­வி­ப­ர­வியல் துறை­யி­னரின் தக­வல்­க­ளின்­படி, மேற்­படி யாத்­தி­ரி­கர்­களில் 958,137 பேர் ஆண்கள், 875,027 பேர் பெண்கள்.

அரபு நாடுகளைச் சேர்ந்தவர் யாத்திரிகர்கள் 22.3 சதவீதமாகும். அரபு நாடுகள் அல்லாத ஆசிய நாடுகளின் யாத்திரிகள் 63.3 சதவீதம். அரபு அல்லாத ஆபிரிக்க நாட்டவர்கள் 11.3 சதவீதம். ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா கண்டங்கள் மற்றும் ஏனைய பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் 3.2 சதவீதமாகும்.

மேற்படி வட்டாரங்களின் தகவல் களின்படி,  இவ்வவருட ஹஜ் யாத்திரைக்கு  சவூதி அரேபியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்களில் 1,546,345  பேர் வான் வழியாகவும், 60,253  பேர் தரை வழியாக வும், 4,714  பேர் கடல் வழியாகவும் வந்துள் ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர்...

2024-07-14 12:33:50
news-image

டிரம்ப் மீது துப்பாக்கிபிரயோகம் ஒரு கொலை...

2024-07-14 10:57:38
news-image

தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப்மீது துப்பாக்கி...

2024-07-14 07:31:23
news-image

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் :...

2024-07-14 06:57:37
news-image

அங்­கோலா முன்னாள் ஜனா­தி­ப­தியின் மக­னுக்கு ஊழல்...

2024-07-14 09:55:12
news-image

பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐ.அ. இராச்­சி­யத்தில்...

2024-07-13 17:16:55
news-image

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில்...

2024-07-13 16:55:46
news-image

இந்தியாவில்13 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு...

2024-07-13 12:39:59
news-image

பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் 'பிம்ஸ்டெக்'கின்...

2024-07-13 10:54:13
news-image

மொஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 3...

2024-07-13 10:12:04
news-image

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்...

2024-07-12 15:06:27
news-image

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான...

2024-07-12 12:28:03