(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவால் அரசியலமைப்பு பேரவையின் அதிகாரமும், பிரதம நீதியரசரின் அதிகாரங்களும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் முத்துறைகளையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள கட்டளையினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றத்தின் தலைவர் பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் பரிந்துரையை ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு முன்வைத்திருந்தார்.இந்த பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்தது.இதனால் தனது அடிப்படை மீறப்பட்டுள்ளதாக நீதியரசர் பந்துல கருணாரத்ன உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பிரதம நீதியரசர் தவிர உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் பதவியில் இருந்து ஓய்வுப் பெறும் வரை புதிய நியமனங்கள் வழங்குவதற்கு இடைக்காலத் தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.இந்த இடைக்கால தடையுத்தரவால் முத்துறைகளும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி,இரண்டாம் குடிமகனான பிரதமர்,மூன்றாம் குடிமகனான சபாநாயகர் மற்றும் நான்காம் குடிமகனான பிரதம நீதியரசர் ஆகியோருக்கு தடையுத்தரவால் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.அத்துடன் பிரதம நீதியரசரின் அதிகாரமும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் இரண்டு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதுடன், 5432 வழக்குகள் நிலுவையில் உள்ளன.தனக்கு தேவையான நீதியரசர் குழாமை நியமித்துக் கொள்ள முடியாத நிலைக்கு பிரதம நீதியரசர் தள்ளப்பட்டுள்ளார்.இந்த தடையுத்தரவு நீடித்தால் இறுதியில் பிரதம நீதியரசர் மாத்திரமே உயர்நீதிமன்றில் மிகுதியாகுவார்.
உயர்நீதிமன்றத்தின் தாமதத்தால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன.ஆகவே உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பில் ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவால் அரசியலமைப்பு பேரவையின் 7 ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகள் மீறப்பட்டுள்ளன.ஆகவே அரசியலமைப்பு பேரவை இவ்விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள் அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளினால் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.ஒரு சில விடயங்களில் அவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM