மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு டீன் வீதி ஏ.எல் எஸ். மாவத்தை வீதியில் புதன்கிழமை (19) மாலை மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டோன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே (43) வயதான நபர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாயாரைப் பார்ப்பதற்காக அப்றார் நகர், 4ம் குறுக்கு வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் காணப்பட்ட வீடொன்றின் மதிலில் மோதியமையால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
05 பிள்ளைகளின் தந்தையான (43) வயது நபரே இவ்வாறு உயிழந்துள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM