பிரபுதேவா நடிக்கும் 'மூன் வாக்' பட டைட்டில் லுக் வெளியீடு

Published By: Digital Desk 7

19 Jun, 2024 | 08:12 PM
image

'நடன புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'மூன் வாக்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் மனோஜ் என். எஸ். இயக்கத்தில் உருவாகி இருக்கும் மூன் வாக் எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.

அனூப் வி சைலஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.‌  இந்தத் திரைப்படத்தை தயாரிப்பாளர் மனோஜ் -திவ்யா மனோஜ்- பிரவீண் எலாக் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'மூன் வாக்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த டைட்டிலும், அதற்காக வடிவமைக்கப்பட்ட பின்னணி மற்றும் வண்ணம் வித்தியாசமாக‌ இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய கார்த்தியின் 'சர்தார் 2'

2024-07-13 18:57:21
news-image

பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' டீசர் வெளியீடு

2024-07-13 18:58:37
news-image

மணிரத்னம் வெளியிட்ட ஹன்சிகா மோத்வானியின் 'காந்தாரி'...

2024-07-13 18:28:20
news-image

நயன்தாரா நடிப்பில் தயாராகும் 'மூக்குத்தி அம்மன்...

2024-07-13 18:24:20
news-image

இயக்குநர் அட்லி வெளியிட்ட 'மிஸ்டர் ஹவுஸ்...

2024-07-13 18:21:04
news-image

டீன்ஸ் - விமர்சனம்

2024-07-13 16:01:34
news-image

டட்டூவை மையப்படுத்தி தயாராகும் 'லவ் இங்க்'

2024-07-13 11:08:19
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்...

2024-07-13 10:51:25
news-image

இந்தியன் 2 - விமர்சனம்

2024-07-13 09:50:54
news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39