முதுகெலும்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

19 Jun, 2024 | 08:19 PM
image

எம்மில் சிலருக்கு திடீரென்று மலம் மற்றும் சிறுநீர் வெளியேறாத நிலை ஏற்படும். இது ஒரு முதுகெலும்பு பாதிப்பிற்கான அறிகுறி மற்றும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டிய அவசர நிலை என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமரும் போதும் நடக்கும் போதும் மாடிப்படி ஏறும் போதும் உட்காரும் போதும் ஆரோக்கியமான உடல்நிலைக்குரிய வடிவங்களை பின்பற்றாமல், எம்முடைய சௌகரியத்திற்கு ஏற்ப அல்லது இருக்கைகளின் வசதிக்கேற்ப அல்லது எம்முடைய மனநிலைக்கு ஏற்ப அமர்கிறோம். மாடிப்படி ஏறுகிறோம் .

இதனால் எம்முடைய முதுகெலும்பின் ஆரோக்கியமும், அதன் செயல் திறனும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக முதுகெலும்பின் பாதுகாப்பிற்காக அமையப்பெற்றுள்ள சவ்வு மற்றும் மூட்டு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் அதனைத் தொடர்ந்து முதுகெலும்பு சீரற்ற நிலைமையில் இயங்கி, இயல்பான நிலையிலிருந்து நழுவி முன் நகர்ந்து விடும். இத்தகைய பாதிப்பை மருத்துவ வைத்திய நிபுணர்கள் டீஜெனரேடிவ் லிஸ்திஸிஸ் என குறிப்பிடுகிறார்கள்.

நாட்பட்ட கீழ் பக்க முதுகு வலி, கால் வலி, கால் மூட்டு வலி, தசை இறுக்கம், சோர்வு, உறக்கமின்மை, நடையில் தடுமாற்றம், சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுதலில் கட்டுப்பாடு, மாதவிடாய் சுழற்சியில் சீரற்ற தன்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால், உங்களுடைய முதுகெலும்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து, உடனடியாக அந்த துறை வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

இந்த தருணத்தில் வைத்திய நிபுணர்கள் எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர்.‌ பரிசோதனையின் முடிவில் முதுகெலும்பின் முன்னகர்வு எந்த நிலையில் இருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானிப்பர். பாதிப்பு வகைப்படுத்தப்பட்ட நான்கு நிலைகளில் எந்த நிலையில் இருக்கிறது என்பதனை பொறுத்து சிகிச்சையை தீர்மானிப்பர்.‌

வலி நிவாரணி மருந்தியல் சிகிச்சை, வீரியம் குறைந்த ஸ்டீராய்டு மருந்தியல் சிகிச்சை, தசை தளர்விற்கான சிகிச்சை, நரம்பு அழுத்த பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான மருந்தியல் சிகிச்சை இவற்றுடன் பிஸிகல் தெரபி, பிரத்யேக அங்கி, பாதிக்கப்பட்ட எலும்பு பகுதிக்குள் ஊசி மூலமாக நேரடியாக செலுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்தியல் சிகிச்சை போன்ற முதன்மையான நிவாரண சிகிச்சைகளை வழங்குவர். இதன் பிறகும் நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை என்றால் கணினி வசதியுடன் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் எளிதாக்கப்பட்ட நுண் துளை சத்திர சிகிச்சை எனப்படும் மைக்றோ சர்ஜேரி மூலம் முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.

வைத்தியர் விக்னேஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32