எம்மில் பலரும் தங்களது கஷ்டங்களையும், விவரிக்க இயலாத துயரங்களையும் ஆலயத்திற்குச் சென்று இறைவன் முன்னால் மனதார பிரார்த்தித்துக் கொண்டே பகிர்ந்து கொள்வர். மேலும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைய வேண்டும் என்றும் மனமுருக வேண்டுவர். சிலர் தாங்கள் நினைத்த காரியம்.. அவை நியாயமான ஆசையாக இருந்தாலும் நடைபெறாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறதே..! என கவலை அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்திருப்பர். இவர்களுக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்களும், ஜோதிட நிபுணர்களும் உடனடியாக பலனளிக்கும் வலிமைமிக்க நாமாவளி பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
நினைத்த காரியத்தை உடனடியாக நடத்திக் கொடுப்பதில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திர தினத்தன்று வணங்கி கீழ்க்கண்ட இருபத்தியெட்டு நாமாவளிகளை பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.
நாமாவளி:
ஓம் வைஸாக சுக்ல பூதோத்தாய நம
ஓம் சரணாகத வத்ஸலாய நம
ஓம் உதார கீர்தயே நம
ஓம் புண்யாத்மனே நம
ஓம் தண்ட விக்ரமாய நம
ஓம் வேதத்ரய ப்ரபூஜ்யாய நம
ஓம் பகவதே நம
ஓம் பரமேஸ்வராய நம
ஓம் ஸ்ரீ வத்ஸாங்காய நம
ஓம் ஸ்ரீனிவாஸாய நம
ஓம் ஜகத் வ்யபினே நம
ஓம் ஜகன்மயாய நம
ஓம் ஜகத்பாலாய நம
ஓம் ஜகன்னாதாய நம
ஓம் மஹாகாயாய நம
ஓம் த்விரூபப்ரதே நம
ஓம் பரமாத்மனே நம
ஓம் பரஜ்யோதிஷே நம
ஓம் நிர்குணாய நம
ஓம் ந்ருகே ஸரினே நம
ஓம் பரதத் த்வாய நம
ஓம் பரன்தாம்னே நம
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நம
ஓம் ஸர்வாத்மனே நம
ஓம் தீராய நம
ஓம் பிரஹலாத பாலகாய நம
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹாய நம
சிலருக்கு இந்த நாமாவளிகளை பாராயணம் செய்வதில் அசௌகரியங்களும், தடங்கலும் ஏற்பட்டால் கீழ்க்கண்ட பாடலை பாடியும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்கலாம். இந்தப் பாடலை நாளாந்தம் காலையில் எழுந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் உருவப்படத்திற்கு முன் அவரின் விருப்பத்திற்குரிய பானகத்தை நிவேதனமாக படைத்து பதினெட்டு முறை தொடர்ச்சியாக பாராயணம் செய்ய வேண்டும்.
பாடல் :
யஸ்யாபவத் பக்தஜனார்த்திஹந்து
பித்ருத்வமந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பேவதார தமநந்ய லப்யம்
லக்ஷ்மீ நரஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே
இந்தப் பாடலை பாடினாலும் உங்களுடைய கஷ்டங்கள் விலகி நினைத்த காரியம் நினைத்தபடி விரைவாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.
தொகுப்பு :சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM