முறைமை மாற்றத்துக்காக வருகின்ற வாய்ப்புக்கள்

Published By: Digital Desk 3

19 Jun, 2024 | 04:07 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

இரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை கண்ட அறகலய போராட்ட இயக்கத்தின் முக்கியமான ஒரு சுலோகமாக அமைந்த  'முறைமை மாற்றத்துக்கான" கோரிக்கை நிச்சயமாக பன்முகத்தன்மை கொண்டதாகும். திருடப்பட்ட சொத்துக்களை மீட்டுக்கொண்டு வருதல்,  முறைகேடுகளைச் செய்தவர்களை தண்டித்து ஊழலுக்கு ஒரு முடிவைக் கட்டுதல் உட்பட பல்வேறு விடயதானங்களை அது கொண்டிருந்தது.

போராட்ட இயக்கம் கொண்டிருந்த, தொடர்ந்தும் கொண்டிருக்கின்ற புதிய சமூக ஒழுங்கு ஒன்றுக்கான நோக்கு இன்னமும் வெகு தொலைவிலேயே இருக்கிறது என்பதே தற்போதைய யதார்த்தமாகும். குற்றச்செயல்கள் மூலமான ஆதாயயங்களுக்கு எதிரான புதிய சட்டமொனறை அரசாங்கம் இயற்றுகின்ற போதிலும், திருடப்பட்ட சொத்துக்கள்  உள்நாட்டுக்குள்ளோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ மீட்டுக் கொண்டுவரப்படவில்லை.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க படைபலத்தைப் பயன்படுத்தி அறகலய போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதற்கு முன்னதாக  அதன் இறுதிக் கட்டங்களில் தீக்கிரையாக்கப்பட்ட உடைமைகளுக்கு சொந்தமானவர்கள் இன்னமும் இழப்பீட்டைக் கோரிக்கொண்டிருக்கிறார்கள். இழந்த சொத்துக்களின் பெறுமதியை  விடவும் மிகவும் கூடுதலான பெறுமதி ஈழப்பீடுகள் கோரப்படவதாக அந்த இழப்பீடடு விண்ணப்பங்களைப் பெறும் அரசாங்க அதிகாரிகள் அந்தரங்கமாக கூறுகிறார்கள் 

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கீழான அரசாங்கம் முன்னென்றும் இல்லாத அளவுக்கு கூடுதல் எண்ணிக்கையில் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது  அல்லது சட்டங்களை மீளாய்வு செய்திருக்கிறது. கடந்த இரு வருட காலத்தில் சுமார் 75 புதிய சட்டங்களை நிறைவேற்றியிருப்பதாக  அரசாங்க தலைவர்கள் பெருமிதப்படுகிறார்கள். 

பொருளாதாரத்துடன் தொடர்புடைய புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றுகிறது. புதிய பொருளாதார நிலைமாற்ற சட்டம் ஒன்றை  அது வரையவிருக்கின்றது.  மின்சாரச் சட்டம் நறைவேற்றப்பட்டிருக்கின்றமை  இரு  வருடங்களுக்கு ஒரு மணித்தியாலத்துக்கு கிலோவாட் 4 அமெரிக்க டொலர்கள் 6 சதத்தை கட்டணமாக நிர்ணயிப்பதற்கான உடன்பாட்டுடன் பாரிய காற்றாலை மின்  திட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது. ஆனால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் அடிப்படையில் மணித்தியாலம் ஒன்றுக்கு கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 3 டொலர்களும் 5 சதமும் செலவாகிறது.

இந்தியாவில் இந்த செலவு மூன்று டொலர்களும் ஐந்து சதமுமாகும். அதனால் இலங்கைக்கு கணிசமான நிதி இழப்பு ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. பாவனையாளர்கள் மீதும் நீண்டகாலத்துக்கு சுமை ஏற்றப்படவிருக்கிறது.

"இலங்கையில் ஊழல் முக்கியமான ஒரு    பிரச்சினையாக இருக்கிறது. அதை எவ்வாறு கையாளுவது  என்பது பற்றியே எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஊழல்காரர்களை எவ்வாறு மடக்கிப்பிடிப்பது என்பதைை எவரும் எமக்கு கூறுகிறார்கள் இல்லை. அதுவே பிரச்சினை. அதனால் எனது அரசாங்கம் இந்த பிரச்சினை குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஒன்றுக்கு வந்திருக்கிறது. அவர்களது உதவி எமக்கும் தேவைப்பட்டது. ஆட்சிமுறைக் குறைபாடுகளை சீர்செய்வதற்கான வழிமுறைகளைக் கூறும் அறிக்கையை நாம் கொண்டுவந்தோம்.

"பல சட்டங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஒரு சட்டம் அதாவது ஊழல் தடுப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக குற்றச்செயல்கள் மூலமான ஆதாயங்களுக்கு எதிரான சட்டம் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படுவதற்காக இப்போது வரையப்பட்டுக் கொண்டிருக்கிறது" என்று ஜனாதிபதி தனது அண்மைய உரையொன்றில் கூறினார்.

இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதே எப்போதும் சவாலாக இருக்கப்போகிறது. அதற்கு உயர்மட்டத்தில் இருந்து அரசியல் தலைமைத்துவம் அவசியமாகிறது. தவறான ஆட்சிமுறைக்கு எதிரான  சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவது ஊழலைக் குறைப்பதற்கு முன்னோக்கிய ஒரு வழியைக் காட்டும். ஆனால் அரசாங்கம் இதை விடுத்து சீர்திருத்தங்களின் ஏனைய விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது.

இரண்டாவது வாய்ப்பு

அறகலய போராட்ட இயக்கத்தின்போது கோரப்பட்ட முறைமை மாற்றத்தின் இரண்டாவது அம்சம் ஜனாதிபதியையும் பிரதமரையும் உண்மையில் போக்கிரிகளை விடவும் மோசமானவர்கள் என்றும் தோல்வி கண்டவர்கள் என்றும் வர்ணிக்கப்பட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையாகும். அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதற்கு புதிய தலைமைத்துவம் ஒன்றை பதவிக்கு கொண்டுவருவதற்கு  மக்கள் வாக்களிக்க  புதிதாக தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பதே உண்மையில் கோரப்பட்டது.

போராட்ட இயக்கத்தை சமாளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட முயற்சிகளில் எதிரணி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும்   (இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற) சிவில் சமூக தலைவர்களையும் உள்வாங்கி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து பிறகு ஆறு மாதங்களில் அல்லது பொருளாதார நிலைவரம் உறுதிப்பாட்டை அடையும்போது தேர்தல்களை நடத்துவது என்ற யோசனையையும் உள்ளடக்கியிருந்தன.

ஆனால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலமாக விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பிறகு அந்த யோசனை கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தைகளும் முடிவுக்கு வந்தன.

புதிய ஜனாதிபதி பதவியேற்ற ஆரம்பக் கட்டத்தின்போது பொருளாதாரம் வழமைநிலைக்கு கொண்டுவரப்பட்டு மக்களின் பொருளாதார நலன்கள் மீணடும் உறுதிப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெட்ரோல் நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்கள் முன்பாக மக்கள் இரவுபகலாக  மைல் கணக்கில்  காத்துநின்ற சூழ்நிலை விரைவாக முடிவுக்கு வந்தததையும்  சூப்பர் மார்க்கெட்டுக்களில் மீண்டும் பொருட்கள் விற்பனைக்கு வந்தததையும் அடுத்து விலைவாசி நியாயமான மட்டங்களுக்கு இறங்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படத் தொடங்கியது.

அத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி அரசாங்கம்  செலவினங்களை விடவும் பொருளாதார மீட்சிக்கே முன்னுரிமை கொடு்கப்படும் என்று வாதிடக்கூடியதாக இருந்தது. உள்ளூராட்சி தேர்தல்களை அரசாங்கம் இரத்துச் செய்வதற்கும் இதைப் பயன்படுத்தியது. உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை நிறுத்தி வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறிச் செயற்படுகி்ற அளவுக்கு அந்த தேர்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அமைந்தன. 

 பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கும் தருணம் தேர்தல்களுக்கு பொருத்தமானது  என்ற அரசாங்கத்தின் வாதத்தை மக்களில் பலரும்  ஏற்றுக் கொண்டதாக தோன்றிய சூழ்நிலையில் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்ட்டதற்கு எதிராக பெரிதாகப் போராட்டங்கள் இடம்பெறவில்லை.

 பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக தேர்தல்களைப் பின்போடவேண்டும் என்ற அதே வாதம் இரு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் தற்போது மீணடும் முன்வைக்கப்படுகிறது. இ்ன்னமும் நான்கு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில்,  முறைமை மாற்றத்துக்கான  மிகவும் முக்கியமான அம்சம் மக்களுக்கு எட்டக்கூடிய தூரத்தில் இருககிறது என்ற ஒரு பலமான உணர்வு நாட்டில் காணப்படுகிறது. நாட்டுக்கு தலைமை தாங்கவேண்டியவர் யார் என்பதை தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு விரைவில் வருகிறது.

 இத்தகைய பினபுலத்தில், தேர்தல்களைப் பின்போடுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது பற்றிய அரசாங்க தலைவர்களின் பேச்சுக்கள் அல்லது அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஒரு சட்ட ஓட்டை அரசாங்கம் மேலும் ஒரு வருடகாலம் பதவியில் நீடிப்பதற்கு அனுமதிக்கும் என்ற வாதங்கள் டைனமைற் போன்றவைாகும். தேர்தல்களை தாமதிப்பதற்கு  மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியும் பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும். அத்தகைய முயற்சிகள் முறைமை மாற்றத்தை தடுப்பதற்கு தற்போதைய தேசிய பாதுகாப்பு சட்டங்கள் போதாமல் போகக்கூடிய அளவுக்கு நாட்டில் எதிர்ப்பு அலையைக் கிளப்பும்.

மூன்றாவது வாய்ப்பு 

முறைமை மாற்றத்தின் மூனாறாவது அம்சம் நாட்டின் பெரும் பகுதியினதும் கவனத்தின் மையத்தில் இருந்து அருகிவிட்ட போதிலும் வடக்கு, கிழக்கிற்கும் சர்வதேச மனித உரிமைகள் சமூகத்துக்கும் இன்னமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இனத்துவ தேசியவாதத்தை உச்சபட்சத்துக்கு பயன்படுத்திய மிகுந்த சேியவாத தலைவர்களின் ஆட்சிக்காலத்திலேயே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவாக இலங்கை தற்போது அதன் நீண்டகால இனநெருக்கடி தொடர்பில் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை நேர்மறையான மாற்றம் ஒன்றை கண்டுவருகிறது.

"முறைமை மாற்றம்" ஒன்று நாட்டுக்கு தேவை என்ற எண்ணம் இனவெறியை பகிரங்கமாக நிராகரித்து சகல குடிமக்களுக்கும் சமத்துவமான உரிமைகள் என்ற சுலோகத்தை முக்கியத்துவப்படுத்திய மாணவர்கள் தலைமையிலான போராட்ட இயக்கத்தினால் ஊக்குவிக்கப்பட்டது. எந்த பொருளாதார நெருக்கடியும் இல்லாத சுதந்திரத்துக்கு முன்னரான காலப்பகுதியில் இருந்தும் சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியிலும் இலஙகையில் நிலையானதாகிப்போன ஒரு அம்சமான இனநெருக்கடியைக் கையாளுவதில் இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள்.

எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்குள் மிகவும் கடுமையாகப் போட்டியிடப்போகின்ற மூன்று பிரதான வேட்பாளர்களினாலும் அரசியமைப்புக்கான 13  வது  திருத்தம் மற்றும் மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் பொதுவான ஒரு கடப்பாட்டை வெளிக்காட்டக் கூடியதாக இருக்கிறது. இது வன்முறைகளை தூண்டுவதற்கும் வாக்குகளைக் கைப்பற்றுவதற்கும்  இனத்துவ தேசியவாதம் இனத்துவ தேசியவாதம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்த கடந்த காலத்தில் இருந்து குறிப்பிடத்தக்க ஒரு  விலகலைக் குறிக்கிறது.

13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை ஆதரிப்பதாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்த அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரா குமார திசாநாயக்கவும் யாழ்ப்பாணத்திலும் லண்டனிலும் வைத்து தாங்களும் மாகாணசபை முறைமையுடன் சேர்ந்து செய்படத்தயாராக இருப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருக்கிறார்.  ஜனாதிபதியாக பதவியேற்ற உடனடியாக அவர் பொலிஸ், காணி அதிகாரங்களை பரவலாக்குவதைக் கூட ஆதரித்துப் பேசினார்.

இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு இரு தரப்பு மற்றும் பலகட்சி கருத்தொருமிப்பை காண்பது என்பது இலங்கையில் வரலாற்று ரீதியான ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. தமிழ்ப் பிரதிநிதிகளுடன் உடன்படிக்கைகளைச் செய்துகொண்ட முன்னைய அரசாங்கத் தலைவர்கள் இனத்துவ தேசியவாத அச்சவுணர்வுகளை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திய போட்டி அரசியல் சக்திகளின் எதிர்ப்பு காரணமாக தங்களது வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறினர்.

அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றுக்கான தேசிய கருத்தொருமிப்பு ஒன்றை ஏற்படுத்துவதில் சிவில் சமூக்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் ஒன்று இருக்கிறது.

பௌத்த பிக்குமாரும் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் முன்னெடுத்த முயற்சி "இமாலயப் பிரகடனத்துக்கு" வழிவகுத்தது. ஜனாதிபதி வேட்பாளர்களினால் செய்யப்பட்ட "யாழ்ப்பாணப் பிரகடனத்துக்கு" அது உதவியாக அமைய முடியும். இதன் விளைவாக தோன்றக்கூடிய ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலை புதிய அரசாஙகம் பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதிலும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பிரிவினருக்கு உதவுவதற்கான நிவாரணத் திடடங்களைை மேம்படுத்துவதிலும்  ஆட்சிமுறை மற்றும் ஊழல் பிரச்சினைக் கையாளுவதிலும் கவனத்தைச் செலுத்தவதற்கு உதவும். முறைமை மாற்றத்துக்காக வருகின்ற வாய்ப்புக்கள் உறுதியான முறையில் பயன்படுத்தப்படவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐந்துமாத குழந்தைக்கு சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தத வேளை...

2024-07-10 17:04:03
news-image

தேர்தல் வாக்குறுதிகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ள மலையக தனிவீட்டுக்...

2024-07-10 14:42:33
news-image

இலங்கை தமிழர்களுக்கான ஒரு மிதவாதக்குரல்

2024-07-10 11:42:47
news-image

என்ன இந்த 'மார்ஷல்' பதவிநிலை? 

2024-07-10 10:48:07
news-image

தேசிய ரீதியில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஜனாதிபதியின்...

2024-07-10 10:21:25
news-image

புதிய ஜனாதிபதியின் கீழ் ஈரானின் வெளியுறவுக்...

2024-07-09 15:53:45
news-image

ஜனநாயக செயன்முறையில் அரசாங்கத்தின் கடப்பாடு மீதான...

2024-07-08 16:03:50
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் தீவிரமடையும் போஷாக்கின்மை! : ...

2024-07-07 16:54:00
news-image

மூன்று வருடங்களில் பத்தாயிரம் வீடுகள் சாத்தியமா?...

2024-07-07 16:02:29
news-image

பிரான்ஸிய தேசியவாத எழுச்சி

2024-07-07 18:19:37
news-image

முதலீடுகள், வட்டி வருமானம், வரி

2024-07-07 18:19:52
news-image

பிரித்தானிய தேர்தலில் ஈழத்தமிழ் பெண்ணின் வெற்றி

2024-07-07 16:58:15