நெதன்யாஹுவின் அரசாங்கத்துக்கு எதிராக ஜெருஸலேமில் இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம் !

19 Jun, 2024 | 04:26 PM
image

(ஆர்.சேதுராமன்)

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தலைமையிலான இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராக இஸ்ரேலியர்கள் திங்கட்கிழமை (17) பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஜெருஸலேம் நகரில் நெதன்யாஹுவின் இல்லத்துக்கு அருகிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக் கணக்கானோர் பங்குபற்றினர்.

காஸா யுத்தம் மற்றும் பணயக் கைதிகளின் விடுதலைக்கான பேச்சுவார்த்தை நடத்தத் தவறியமை தொடர்பாக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இஸ்ரேலின் மிகப் பெரிய நகரான டெல் அவிவ்வில் ஒவ்வொரு வார இறுதியிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.  ஆனால், திங்கட்கிழமை இஸ்ரேலிய பாராளுமன்றம் மற்றும் நெதன்யாஹுவின் வாசஸ்தலத்துக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர்.

புதிய தேர்தல்களை நடத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்கர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன.

இம்மோதல்களால் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சிலருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன என இஸ்ரேலிய பொலிஸ் தெரிவித்துள்ளது.

 உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவுவதற்காக வீதியோரத்தில் நின்றிருந்த மருத்துவர் ஒருவரும் இதன்போது காயமடைந்துள்ளார்.  குறைந்தபட்சம் 9 பேர் கைது செய்யப்பட்டுளளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தள்ளனர். 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13