'மூக்குடைப்பட்ட' பிரான்ஸ் அணித் தலைவர் எம்பாப்பே அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாம்

Published By: Digital Desk 7

19 Jun, 2024 | 04:14 PM
image

(நெவில் அன்தனி)

டஸ்ல்டோர்வ் எரினா விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அவுஸ்திரியாவுக்கு எதிரான ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் முக்கில் காயமடைந்த பிரான்ஸ் அணித் தலைவர் கிலியான் எம்பாப்பே அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரியாவுடனான போட்டியின் 38ஆவது நிமிடத்தில் மெக்ஸ்மிலன் வொபர் போட்டுக் கொடுத்த சொந்த கோலின் உதவியுடன் பிரான்ஸ் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் பிரான்ஸ் வெற்றிபெற்றது.

இதன் மூலம் டி குழுவுக்கான ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியை வெற்றியுடன் பிரான்ஸ் ஆரம்பித்த போதிலும் அதன் தலைவர் கிலியான் எம்பாப்பேயின் மூக்கில் ஏற்பட்ட காயம் அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில்  அவுஸ்திரியாவின் பின்கள வீரர் கெவின் டன்சோவும் கிலியான் எம்பாப்பேயும் பந்தை நோக்கி உயரே தாவி தலையால் முட்ட முயற்சித்தபொதே கிலியான் எம்பாப்பே காயம் அடைந்தார்.

காயத்திற்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் களத்தினுள் புகுந்த அவர் மீண்டும் தரையில் வீழ்ந்ததால் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.

போட்டியின் 90ஆவது நிமிடத்தில் கிலியான் எம்பாப்பேக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவர் களம் இறக்கப்பட்டார்.

மூக்கில் ஏற்பட்ட காயத்தை அடுத்து இரத்தம் சொட்ட சொட்ட அவர் மூக்கைப் பிடித்தவாறு தரையில் அமார்ந்தார். அதன் பின்னர் அவருக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

நெதர்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா இல்லையா என்பதை பயிற்றுநர் டிடியர் டெஸ்சாம்ப்ஸினால் உறுதி செய்யமுடியவில்லை.

'அவரது மூக்கில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. அதனை நாங்கள் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது துரதிர்ஷ்டமானது' என டிடியர் டெஸ்சாம்ப்ஸ் கூறினார்.

கிலியான் எம்பாப்பே தற்போது சிகிச்சையுடன் ஓய்வெடுத்து வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right