கதிர்காம பாதை யாத்திரையின் போதான அதன் வீதி வழி பயணத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது ; இராவணண் சேவா அமைப்பின் தலைவர் தெரிவிப்பு !

19 Jun, 2024 | 03:44 PM
image

கதிர்காம பாதை யாத்திரையின் போதான அதன் வீதி வழி பயணத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணண் சேவா அமைப்பின் தலைவர் கே.செந்தூரன் தெரிவித்தார்.  

திருகோணமலையில் இன்று புதன்கிழமை (19) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் , 

அவசரமாக சென்று யாத்திரைகளை நிறைவேற்ற முடியாது பக்தர்களின் வருகையை குறைக்கும் செயலாக இந்த நாட்கள் பிற்போடப்பட்டமை காணப்படுகிறது .

பண்டைய காலம் தொடக்கம் மரபு ரீதியாக இது நடை பெறுகின்றது. 

நேர்த்தி கடனுக்காக சிறுவர்கள் முதல் பெரியார்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என உகந்தை முதல் கதிர்காம யாத்திரைகளை சைவப்படி மேற்கொள்வது வழக்கம்.  

ஆனால் தற்போது அடுத்த மாதம் 2ம் திகதி வரை பிற்போட்டிருப்பதும் குறுகிய காலத்தில் செய்வதென்பதும் தடுக்கும் செயலாக காணப்படுகிறது. 

சிங்களவர்கள் தமிழர்கள் என பலரும் கதிர்காம யாத்திரையினை மேற்கொள்வது வழக்கம். ஈழத்து சைவர்களின் வாழ்வியலில் ஒன்றாக காணப்படுகிறது. 

நடந்து சென்று நேர்த்தி கடனை நடந்து சென்று ஆண்மீகம் தொன்று தொட்டு நடந்து வருகிறது கடினமான பாதை காடுகள் ஊடாக செல்ல வேண்டும்.

இந்த மாதம் 30ம் திகதி திறக்கப்பட இருந்த நிலையில் நாட்கள் பிற்போடப்பட்டுள்ளது நான்கு நாட்களுக்குள் இதனை நிறைவேற்றுவது கடினம்.

பல்லாயிரக்கணக்கான பாதை யாத்திரை குழுக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் வழமை போன்று இந்த பாதை யாத்திரை நடைபெற முன்வர வேண்டும்.  எனவே உரிய அரச தரப்பினர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவருடகாலத்துக்கு நீடியுங்கள் ; ஐ.நா மனித...

2025-01-18 22:05:07
news-image

சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வின் மூலமே தமிழர்களின்...

2025-01-18 22:11:09
news-image

ராஜபக்ஷக்கள் நாட்டை சீன கடன்பொறிக்குள் தள்ளவில்லை...

2025-01-18 21:56:39
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை ஏதேனுமொரு பரிமாணத்தில்...

2025-01-18 21:52:14
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கதிரை சின்னத்தில் கூட்டணியாக...

2025-01-18 15:54:49
news-image

இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் நிபந்தனையற்ற நண்பனாக...

2025-01-18 18:19:10
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -...

2025-01-18 21:51:31
news-image

நாடெங்கும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்; பொதுமக்கள்...

2025-01-18 17:06:52
news-image

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன்...

2025-01-18 21:40:27
news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23