இப்போதைய புதுவருட பண்டிகைக் காலத்தில் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் அதிகம் பேசப்படும் ஒரு நிகழ்வாக இருப்பது கொழும்பு ஷொப்பிங் திருவிழாவாகும்.

சிறந்ததும் பெரியதும் என்பதே எமது நோக்கம் கொழும்பு ஷொப்பிங் திருவிழாவானது நீங்கள் எப்போதும் நினைவில் இருத்திக் கொள்ளத்தக்க அனுபவங்களை உங்களுக்குத் தருகின்றது. உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியான விற்பனையாளர்கள் எண்ணுக்கணக்கானோர் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான 5 நாட்களும் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை தங்களது உற்பத்திகளை BMICH இல் காட்சிப்படுத்தவுள்ளனர்.

கொழும்பு ஷொப்பிங் திருவிழா- ஏப்ரல் 2017 ஆனது தொடர்ச்சியாக 25 ஆவது வருடமாகவும் கூட்டங்கள் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் என்பனவற்றை ஒழுங்குசெய்வதில் நிபுணத்துவம் கொண்ட, எயிட்கன் ஸ்பென்ஸ் பீஎல்ஸீயின் நிகழ்வு மேலாண்மை அலகான எயிட்கன் ஸ்பென்ஸ் கொன்வென்ஷன் அன்ட் எக்ஷிபிஷன்ஸ் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெறும் இந்த முதன்மையான கண்காட்சியானது 250 க்கும் மேற்பட்ட கண்காட்சி சாவடிகளைக் கொண்டிருக்கும். இலத்திரனியல், துணிவகை, விளையாட்டுப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், ஒப்பனைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், குழந்தைகளுக்கான உற்பத்திகள், மற்றும் இங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட இன்னும் பல பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கொழும்பு ஷொப்பிங் திருவிழாவானது உங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஒரே கூரையின் கீழ்க் கொண்டிருக்கும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் புதுவருடத்துக்கான தமது அனைத்து தேவைகைளையும் ஒரே இடத்திலேயே நிறைவேற்றக் கூடியதாகவிருக்கும். மற்றும் பல்வேறுபட்ட சலுகைகளும் அங்குண்டு, முழுக் குடும்பமும் மகிழ்ந்திருக்கக் கூடியவகையில் பல்வேறுபட்ட களியாட்ட நிகழ்வுகளும் BMICH இல் இடம்பெறவுள்ளது.

சிறார்களுக்கான பிரத்தியேகமான விளையாட்டிடமொன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு வருவோர்க்கு ஒவ்வொரு நாளும் மணித்தியாலத்துக்கொரு தடவை இடம்பெறும் சீட்டிழுப்புக்களில் பங்குபற்றி கை நிறையப் பரிசுகளை வெல்லுவதற்கான வாய்ப்பும் கிட்டுகின்றது. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கொழும்பு ஷொப்பிங் திருவிழாவானது ஒருவருடமும் சுமார் 50,000 பேரைக் கவர்ந்திழுப்பதோடு வாடிக்கையளர்களுக்குத் தேவையான பொருட்களை நம்பவே முடியாத சலுகைகளுடன் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.