சக பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள முயன்றதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கொழும்பு , கஹதுடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கஹதுடுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடொன்றை வழங்குவதற்காக இரண்டு நபர்கள் கஹதுடுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ள நிலையில் அங்குக் கடமையிலிருந்த சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் தனது கதிரையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, அங்கு கடமையிலிருந்த சக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரை எழுப்பியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இதன்போது, சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சக பொலிஸ் உத்தியோகத்தருடன் முரண்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், இந்த சக பொலிஸ் உத்தியோகத்தர் தனது வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், அங்குச் சென்ற சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் கடுமையான வார்த்தைகளால் திட்டி அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM