பருவகாலத்தின் மாபெரும் ஷொப்பிங் நிகழ்வான ‘‘DSI மெகா 2017’ ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

இல. 257, ஹை லெவல் வீதி, மஹரகம என்ற முகவரியில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட டீ செம்சன் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும்.

புதுவருடத்தின் வரவையொட்டி அனைவருக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பது இதன் பிரதான நோக்கமாகும். இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வைபவம், எந்தவிதக் கட்டணங்களும் இன்றி பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

DSI செம்சன் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குலதுங்க ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வரையறுக்கப்பட்ட டீ செம்சன் அன்ட் சன்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் நந்ததாச ராஜபக்ஷ மற்றும் வரையறுக்கப்பட்ட டீ செம்சன் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி கௌஷல்யா பெரேரா உட்பட நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்தக் களியாட்ட நிகழ்வு காலை 09 மணிக்கு ஆரம்பமாகியது. இது ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை இடம்பெறும். மக்களுக்குத் தேவையான புதுவருடக் கொள்வனவுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள வாய்ப்பளிப்பதே இதன் நோக்கமாகும்.

மஹரகமயில் அமைந்துள்ள பிரதான வர்த்தக மற்றும் ஷொப்பிங் மையமான இந்தக் கட்டடத்தில் தேவையான அளவு வாகனத் தரிப்பிட வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பாதணிகள் மற்றும் அணிகலன்கள், ஆடையணிகள், இலத்திரனியல் உபகரணைங்கள், கையடக்கத் தொலைபேசிகள் (உதிரிப்பாகங்களுடன்) புத்தகங்கள் மற்றும் காகிதாதிகள், மூக்குக்கண்ணாடிகள், மோட்டார் சைக்கிள், பைசிக்கிள் வண்டிகள், உணவு மற்றும் பானங்கள் உட்பட நிதிசார் தேவைகள், சிறுவர்களுக்கான களியாட்ட நிகழ்வுகள் மற்றும் பல்வேறுபட்ட பொருட்களும், சேவைகளும் குறைந்த விலையில் விசேட கழிவுகளுடனும் இலவச சலுகைகளுடனும் வழங்கப்படுகின்றது.

இந்த ஷொப்பிங் களியாட்டத் திருவிழாவில் கலந்து கொண்டு குதூகலத்தை பரிமாறிக்கொள்ள ஷொப்பிங் பிரியர்கள் அனைவரையும் DSI அன்புடன் அழைக்கிறது.