ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான முழுமையான யுத்தம் குறித்து இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் இராணுவ சிவில் கட்டமைப்புகளை காண்பிக்கும் வீடியோக்களை ஹெஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ளதை தொடர்ந்தே இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆளில்லா விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களையே ஹெஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ளது.
நாங்கள் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் லெபானிற்கும் எதிரான விளையாட்டின் விதிமுறைகளை மாற்றும் தருணத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முழுமையான யுத்தமொன்றில் ஹெஸ்புல்லா அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
லெபனான் மோசமாக தாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெஸ்புல்லா அமைப்பு தனது வீடியோவில் இஸ்ரேலின் ஹெய்பா நகரின் பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதிகளை காண்பித்துள்ளது.வணிக வளாகங்கள் உயர்மாடிக்கட்டிடங்கள் போன்றவற்றையும் ஹெஸ்புல்லா அமைப்பு காண்பித்துள்ளது.இந்த நகரம் லெபான் எல்லையி;ல் தென்பகுதியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹெய்பா நகரில் உள்ள இஸ்ரேலின் இராணுவகட்டுமானங்களையும் ஹெஸ்புல்லா அமைப்பு தனது வீடியோவில் காண்பித்துள்ளது.
ஹெய்பா நகரில் உள்ள இஸ்ரேலின் இராணுவகட்டுமானங்களையும் ஹெஸ்புல்லா அமைப்பு தனது வீடியோவில் காண்பித்துள்ளது.
ஏவுகணை பாதுகாப்பு ஐயர்ன் டோம்கள் ஏவுகணைகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகள் ராடர் பகுதிகள் கடற்படை படகுகள் கப்பல்கள் போன்றவற்றையும் ஹெஸ்புல்லா அமைப்பு தனது வீடியோவில் காண்பித்துள்ளது.
ஹெய்பா துறைமுகத்தின் சில பகுதிகளை படம்பிடித்துள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு பெருமிதம் வெளியிட்டுள்ளது ஹெய்பா துறைமுகத்தினை சீனா இந்தியாவை சேர்ந்த பெரும் நிறுவனங்கள் இயக்குகின்றன என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM