பதுளை கரமெட்டிய பகுதியில் காணப்படும் ஆடைத் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற மோதலில் மேற்பார்வையாளர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார்.

கரமெட்டிய பகுதியில் காணப்படும் புதிதாக அமைக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையின் மேற்பார்வையாளரான ஏ.எஸ்.பிரேமச்சந்திர என்ற 38 வயதுடையை நபரே இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகி பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தாக்குதலை மேற்கொண்ட, குறித்த தொழிற்சாலையில் கடமை புரியும் இளைஞர் ஒருவர் கந்தகெட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.