பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற வீதிக்குள் நுழைய முற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் உடனடியாக தொழில் வழங்குமாறு கோரி பத்தரமுல்லை தியத உயன முன்பாக செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் சுமார் 40,000 பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன்போது, வீதியில் செல்லும் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்து.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM