(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உயர் நீதிமன்றம் வழங்கிய முடிவுகளை ஆராய தெரிவுக் குழு நியமிப்பதில் எமக்கு உடன்பாடில்லை. குறைபாடுகள் இருப்பின் வேறு ஏற்றுக்கொள்ளத்தக்க சட்டரீதியான ஏற்பாடுகள் ஊடாக இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாலின சமத்துவம் சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செவ்வாய்க்கிழமை (18) சபைக்கு அறிவித்த பின்னர், அதுதொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கூற்று தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது நாட்டின் முத்தரப்பு ஜனநாயக கட்டமைப்பில், நிறைவேற்று அதிகாரி, சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களிலும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறையும், அதேபோல் இவற்றுக்கிடையே அதிகாரப் பகிர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறைபாடுகள் இருப்பின், தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இது திருத்தப்பட வேண்டும்
ஒரு நிறுவனம் மற்றொன்றை அடக்கி அல்லது மௌனமாக்கும் பிம்பத்தை உருவாக்காதீர்கள். வேறு ஒரு முறையைப் பின்பற்றி, ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை சரிசெய்யும் அரசியலமைப்பு முறைக்குச் செல்ல வேண்டும். உயர் நீதிமன்றம் வழங்கிய முடிவுகளை ஆராய தெரிவுக் குழுக்களை நியமிப்பதில் எமக்கு உடன்பாடில்லை. குறைபாடுகள் இருப்பின் வேறு ஏற்றுக்கொள்ளத்தக்க சட்டரீதியான ஏற்பாடுகள் ஊடாக இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM