ஸ்பெய்னில் தருஷி 600 மீற்றரில் ஆசிய கண்ட சாதனையுடன் 2ஆம் இடம்; காலிங்க 400 மீற்றரில் 3ஆம் இடம்

Published By: Vishnu

19 Jun, 2024 | 11:39 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்பெய்ன் தேசத்தின் பில்பாஓ நகரில் அமைந்துள்ள விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 19ஆவது ரீயூனியன் சர்வதேச  மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் தருஷி கருணாராட்ன, காலிங்க குமாரகே ஆகிய இருவரும் தத்தமது நிகழ்ச்சிகளில் முறையே 2ஆம் இடத்தையும் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான தரம் ஏ 600 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம் 24.84 செக்கன்களில் நிறைவு செய்த தருஷி கருணாரட்ன ஆசிய கண்ட சாதனையுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றார். முந்தைய ஆசிய கண்ட சாதனை ஒரு நிமிடம் 28.06 செக்கன்களாகும். ஜப்பானின் அயானோ ஷோமி 2022இல் ஏற்படுத்திய சாதனையையே தருஷி இன்று முறியடித்து புதிய ஆசிய கண்ட சாதனையை நிலைநாட்டினார்.

சர்வதேச மெய்வல்லுநர் போட்டி ஒன்றில் 600 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் தருஷி கருணாரட்ன பங்குபற்றியது இதுவே முதல் தடவையாகும்.

அப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் பெண்டியர் ஒபோயா (1:24.53) முதலாம் இடத்தையும் பிரேஸிலின் ஃப்ளாவியா மரியா டி லீமா (1:25.34) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

காலிங்க குமாரகே 3ஆம் இடம்

ஆண்களுக்கான தரம் ஏ 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.91 செக்கன்களில் நிறைவு செய்த காலிங்க குமாரகே 3ஆம் இடத்தைப் பெற்றார்.

பொட்ஸ்வானாவின் பூசாங் கொலின் கெபினட்ஷிப் (45.47 செக்) முதலாம் இடத்தையும் கியூபாவின் யொவாண்டிஸ் லெஸ்கே (45.71 செக்.) இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷை இலகுவாக வென்றது இலங்கை; மாலைதீவுகளை...

2024-07-12 01:25:11
news-image

ரி20 அணிதலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

2024-07-11 19:57:29
news-image

ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி...

2024-07-11 13:04:22
news-image

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ்...

2024-07-11 12:34:03
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற...

2024-07-11 11:59:25
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் அரை இறுதியில்...

2024-07-11 12:01:24
news-image

கத்தாரிடம் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

2024-07-11 13:35:29
news-image

ஹேல்ஸ், பானுக்க அசத்தலான துடுப்பாட்டம்; கண்டி ...

2024-07-11 00:12:14
news-image

இலங்கையை 88-44 என்ற புள்ளிகள் கணக்கில்...

2024-07-10 23:56:19
news-image

ரைலி ரூசோவ் அபார சதம் குவிப்பு;...

2024-07-10 19:43:10
news-image

டேவிஸ் கிண்ண டென்னிஸ் 3ஆவது குழுவுக்கு...

2024-07-10 16:28:07
news-image

7ஆவது அகில இலங்கை வில்லாளர் போட்டியில்...

2024-07-10 16:27:20