ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த சிறுவனை மீட்ட பொலிஸார் ; பெரும் அதிர்ச்சியில் பிரதேசமக்கள்

Published By: Vishnu

19 Jun, 2024 | 01:28 AM
image

விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த சம்பவமொன்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவன் காணாமல் போன நிலையில் காட்டுப்பகுதியிலிருந்து கண்டு பிடித்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லக்ஸபான தோட்டத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய சிறுவனே டங்கல் காட்டுப்பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (18) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திங்கட்கிழமை (17) மாலை சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுவன் வீட்டிற்கு வராத நிலையில் பதற்றமடைந்த ஊர்மக்கள் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்ததுடன் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

டங்கல் மேற் பிரிவில் திருமண நிகழ்வொன்றுக்கு லக்ஸபான தோட்டத்திலிருந்து வந்த உறவினர்களின் பிள்ளையான சிவதாஸ் அபிசான் என்ற நான்கு வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான்.

இந்நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் வனபாதுகாப்பு துறையினரால் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ டி.வி காணொளியில் சிறுவன் ஒருவன் காட்டுப்பகுதியில் நடந்து செல்வது பதிவாகியிருந்த நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த சிறுவனை கண்டுபிடித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்குட்படுத்த டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சிறுவன் காணாமல் போனமை யாராயின் திட்டமிட்ட செயல்பாடா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை...

2024-07-12 16:21:39
news-image

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள...

2024-07-12 16:18:17
news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16
news-image

ஜனாதிபதி தேர்தல் ; நிதி சட்டரீதியான...

2024-07-12 15:20:20
news-image

மலேசியாவில் இலங்கையர் உட்பட 88 வெளிநாட்டவர்கள்...

2024-07-12 15:55:03
news-image

யாழ். நெல்லியடியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2024-07-12 15:59:03
news-image

வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

2024-07-12 15:46:25
news-image

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

2024-07-12 13:00:30
news-image

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில்...

2024-07-12 13:46:56
news-image

பதுளை - கந்தகெட்டிய பகுதியில் சட்ட...

2024-07-12 13:46:35
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-07-12 12:47:48