பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும் 8 பேர் கைது !

18 Jun, 2024 | 09:34 PM
image

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும்  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் மொரட்டுமுல்ல மற்றும் மித்தெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 30 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் கொழும்பு 13 மற்றும் கொழும்பு 10 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் தங்கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் ரொடும்ப பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,696 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றிய...

2025-05-17 17:16:01
news-image

நீர் நிரம்பிய குழியில் விழுந்து மூன்றரை...

2025-05-17 17:11:08
news-image

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள்...

2025-05-17 17:22:05
news-image

மன்னாரில் பலத்த காற்றுடன் கடும் மழை...

2025-05-17 17:30:21
news-image

யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி...

2025-05-17 17:20:47
news-image

தமிழ் மக்கள் கூட்டணியினரால் மல்லாகத்தில் முள்ளிவாய்க்கால்...

2025-05-17 17:06:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் காயம்...

2025-05-17 16:19:20
news-image

உப்பைக் கூட மக்களுக்கு சரியாக வழங்க...

2025-05-17 16:09:24
news-image

75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-05-17 16:19:02
news-image

கனடா நினைவு தூபி இலங்கையில் சிலரின்...

2025-05-17 16:07:13
news-image

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு ;...

2025-05-17 16:18:18
news-image

விபத்தில் சிக்கி 91 வயது மூதாட்டி...

2025-05-17 15:16:17