இளையோர்களுக்கு பயிற்சி, மற்றும் தலைமைத்துவ அமர்வுகளை நடத்திய அனுபவம் வாய்ந்த NBA மற்றும் WNBA விளையாட்டு வீரர்கள் !

18 Jun, 2024 | 09:42 PM
image

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க விளையாட்டுத் தூதுவர்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக Foundation of Goodness மற்றும் IImpact Hoop Lab ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஜூன் 8 ம் ஆம் திகதி முதல் 14ம் தேதி வரை அனுபவமிக்க தேசிய கூடைப்பந்து சங்க (NBA) வீரர் ஒருவரையும் அனுபவமிக்க பெண்கள் தேசிய கூடைப்பந்து சங்க (WNBA) வீராங்கனை ஒருவரையும் இலங்கைக்கு வரவழைத்தது.

இலங்கைக்கான தமது பயணத்தின் போது, முன்னாள் NBA மற்றும் WNBA நட்சத்திரங்களான ஸ்டீபன் ஹொவர்ட் மற்றும் அஸ்டோ என்ஜாய் ஆகியோர் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மட்ட கூடைப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு பல பயிற்சி அமர்வுகளை நடத்தினர்.

இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து, ஆண் மற்றும் பெண் குழுக்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் உட்பட தேசிய கூடைப்பந்தாட்ட அணிகளுக்கான செயலமர்வுகளையும் அவர்கள் வழிநடத்தினர். அவற்றிற்கு மேலதிகமாக, இளம் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு கூடைப்பந்தாட்டத்தை அதிகம் அணுகக்கூடிய ஒரு விளையாட்டாக மாற்றுவதற்கு உதவும் நோக்குடன், விளையாட்டு தூதுவர்களும் அமெரிக்க தூதரகத்தின் ஊழியர்களும் இணைந்து கொழும்பிலுள்ள ஒரு பாடசாலையில் காணப்படும் பெண்களுக்கான உடை மாற்றும் அறையினையும் புனரமைத்தனர்.   

கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை மதிப்பதற்கு இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், வெற்றிக்கான ஒரு மிகமுக்கிய படியாக தோல்வியை ஏற்றுக் கொள்ளல் மற்றும் தலைமைத்துவம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்திய ஆர்வமூட்டும் சொற்பொழிவுகளும் இவ்விஜயத்தில் உள்ளடங்கியிருந்தது.

அமெரிக்க விளையாட்டுத் தூதுவர்களுடன் தீவிர பயிற்சி அமர்வுகளில் ஈடுபட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்காக கொழும்பில் இடம்பெற்ற ஒரு கண்காட்சி விளையாட்டுப் போட்டியின்போது உரையாற்றிய அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹைடி ஹட்டன்பக், “இலங்கையில் அடுத்த தலைமுறை தலைவர்களை வலுவூட்டுவதில் பங்களிப்புச் செய்வதில் அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது. எமது விளையாட்டுத் தூதுவர்களான ஸ்டீபன் மற்றும் அஸ்டோ ஆகியோர், இவ்விளையோருக்கு விடாமுயற்சி மற்றும் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் முக்கியத்துவம் உட்பட தலைமைத்துவம் மற்றும் ஒன்றிணைந்து பணியாற்றுதல் ஆகிய விடயங்களைக் கற்றுக் கொடுத்தனர். அவர்கள் ஒரு சக்திவாய்ந்த செய்தியை தெரிவித்தனர்: இது கூடைப்பந்தாட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல; இது வாழ்க்கையைப் பற்றியது. எமது தோல்விகளை ஏற்றுக்கொள்வதானது, எந்தவொரு துறையிலும் முன்னணியில் இருப்பதற்கும் வெற்றி பெறுவதற்கும் தேவையான மீண்டெழும் தன்மையினையும் படிப்பினைகளையும் எமக்கு வழங்குகிறது.” எனத் தெரிவித்தார்.  

கூடைப்பந்தாட்டம் தனக்குக் கற்றுக் கொடுத்ததைச் சுருக்கமாக கூறிய, விளையாட்டுத் தூதுவர் அஸ்டோ நிதாயே, தனது விஜயத்தின் போது தான் சந்தித்த அனைத்து இலங்கை இளையோர்களுக்காகவும் பின்வரும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார், “உங்களது சொந்த வாழ்க்கையின் கதையை நீங்களே எழுதுமளவிற்குத் தைரியமாக இருங்கள், ஏனெனில் கடினமாக உழைத்தால் அனைத்தும் சாத்தியமே.” 

தனது விஜயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த தூதுவர் ஸ்டீபன் ஹொவர்ட், “நான் இலங்கைக்கு விஜயம் செய்யாமல் இருந்திருந்தால், அனைத்து இலங்கையர்களும் வௌிப்படுத்தும் மகத்தான கண்ணியத்தையும் அவர்களது நல்ல மனதையும் நான் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டேன். நாங்கள் நடத்திய பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டவர்களுக்கு நான் எவ்வளவு கற்றுக் கொடுத்தேனோ, இறுதியில் அவர்களிடமிருந்து நானும் அதேயளவு கற்றுக்கொண்டேன் என நான் நினைக்கிறேன். ஒரு விளையாட்டுத் தூதுவராக இருப்பதானது, இலங்கையைச் சேர்ந்த புதிய அணி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை இணைத்துக் கொள்வதற்கு எனக்கு உதவி செய்துள்ளதென்பதைக் கூறிக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் சென்ற இடமெல்லாம் எமக்கு வழங்கிய அற்புதமான விருந்தோம்பலுக்கு நன்றி.” எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்க விளையாட்டுத் தூதுவர் நிகழ்ச்சித்திட்டம் பற்றி: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பணியகத்தால் முகாமை செய்யப்படும் அமெரிக்க விளையாட்டுத் தூதுவர் நிகழ்ச்சித்திட்டமானது, விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதற்காக தொழில்முறை அமெரிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது. இந்த தூதுவர்கள் விளையாட்டு முகாம்களை வழிநடத்துகிறார்கள், சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்கிறார்கள் மற்றும் தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் பன்முகத்தன்மையினை மதித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பான உரையாடல்களில் இளைஞர்களை ஈடுபடுத்துகின்றனர். பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதும், அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்குமிடையே விளையாட்டுகளின் ஊடாக நேர்மறையான உறவுகளை உருவாக்குவதும் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். 

பட விளக்கங்கள்: 

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க விளையாட்டுத் தூதுவர் ஸ்டீபன் ஹொவர்ட்.   

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க விளையாட்டுத் தூதுவர் அஸ்டோ என்ஜாய்.   

அமெரிக்க விளையாட்டுத் தூதுவர்கள் நடத்திய கூடைப்பந்தாட்ட முகாமில் பங்கேற்ற மாணவர்களுடன் இணைந்து கூடைப்பந்து விளையாடும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்.

CMS ஸ்ரீ ஜயவர்த்தனபுர கல்லூரியில் சமூக சேவை செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விளையாட்டுத் தூதுவர்களான ஸ்டீபன் ஹொவர்ட் மற்றும் அஸ்டோ என்ஜாய் ஆகியோர்.

அமெரிக்க விளையாட்டுத் தூதுவர்களிடமிருந்து நுணுக்கங்கள் மற்றும் ஆலோசனைக்குறிப்புகளைப் பெறும் இலங்கையின் தேசிய கூடைப்பந்தாட்ட வீரர்கள்.

தென் மாகாணத்தில் மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க விளையாட்டுத் தூதுவர் அஸ்டோ என்ஜாய்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு நவகம்புர புனித அந்தோனியார் தேவாலய...

2024-07-15 17:31:31
news-image

இந்து மதம் தொடர்பான விபரங்களை பெறுவதற்கான...

2024-07-15 17:33:17
news-image

அடம்படிவெட்டுவான் கண்டத்தில் சிறுபோக அறுவடை விழா

2024-07-15 16:58:53
news-image

அக்கரைப்பற்றில் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்...

2024-07-15 16:07:50
news-image

மலேசியா - தேவி ஸ்ரீ காப்பாரூர்...

2024-07-14 21:18:06
news-image

ஏ.கே.எஸ். ஆடையகம் கிரிக்கெட் வீரர் சனத்...

2024-07-13 12:57:19
news-image

தமிழில் தேசிய கீதம் பாடிய திருகோணமலையின்...

2024-07-13 13:42:12
news-image

உலகளாவிய கொந்தளிப்புகளுக்கு மத்தியில், குடிமக்கள் சமாதானத்துக்காக...

2024-07-11 14:32:03
news-image

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை...

2024-07-10 17:48:55
news-image

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப்...

2024-07-10 17:35:11
news-image

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்'...

2024-07-09 17:57:31
news-image

தெஹிவளை - கல்கிசை நகர்புற கடற்கரையை...

2024-07-09 17:58:24