ஹப்புதளை - பிளக்வூட்  என்ற இடத்தில் இன்று அதிகாலை கார் ஒன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகி ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பிலிருந்து பண்டாரவளைக்கு நோக்கி பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இவ்விபத்தில் கணவன், மனைவி, மனைவியின் தந்தை ஆகியோரே  காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 

நித்திரை கலக்கமே இவ்விபத்திற்கு காரணமென்று தெரியவந்துள்ளது. 

இவ்விபத்து குறித்து ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

வைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் நிலை  கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- எம்.செல்வராஜா