பித்தப்பை கற்களை அகற்றும் நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

18 Jun, 2024 | 05:32 PM
image

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகள்- நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் உடல் எடை மற்றும் உடற்பருமன் கொண்டவர்கள்- கர்ப்பிணிப் பெண்கள்- அதிக கொழுப்பு சத்து மிக்க உணவுகளை பசியாறுபவர்கள்-  நார் சத்து உணவுகளை மிகக் குறைவாக எடுத்துக் கொள்பவர்கள்- நீரிழிவு நோயாளிகள்- திடீரென்று உடல் எடை குறைபவர்கள்- கல்லீரல் தொடர்பான நோய்த்தொற்று உள்ளவர்கள்..என  இவர்கள் அனைவரும் வைத்திய நிபுணர்களை சந்தித்து பித்தப்பை கற்கள் குறித்த பிரத்யேக பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.

எம்முடைய வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளில் பித்தப்பையும் ஒன்று. இது கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் பித்த நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும் சேமிப்பு பையாகும். இதில் கால்சியம் உள்ளிட்ட இதர உப்புகள் சேகரமாகி, அவை முழுமையாக அகற்றப்படாமல் தேக்கம் அடைந்து, பின் இறுக்கமடைந்து கடினமான கற்களாக மாறுகின்றன. இவற்றை மருத்துவ மொழியில் பித்தப்பை கற்கள் என குறிப்பிடுகிறார்கள்.

இந்த பித்தப்பையில் உருவான கற்கள் பித்தப்பையிலிருந்து பித்தப்பை குழாய் வழியாக செரிமானத்திற்காக செல்லும் பித்த நீரை தடை செய்கிறது. மேலும் பித்த குழாயின் செயல்பாட்டிற்கும் இடையூறு விளைவிக்கிறது. இதனால் வலி ஏற்படக்கூடும். பித்தப்பையின் செயல்பாட்டுத் திறன் பாதிக்கப்படும்.‌

சிலருக்கு பித்தப்பையில் கற்கள் இருந்தாலும் அவை எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. சிலருக்கு வலி ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு வலது புற தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதியில் வலியை உண்டாக்கும். குமட்டல், வாந்தி ஆகியவையும் இதன் அறிகுறிகளாகும். மேலும் சிலருக்கு வலது புற மேல் பகுதி வயிற்றில் வலி ஏற்படக்கூடும்.

நீங்கள் உட்கொள்ளும் அதிக படியான கொழுப்பு சத்துள்ள உணவுகள் கரையாமல் பித்தப்பையில் சேகரமடைந்து  கடினமான கற்களாக உருவாகிறது. மேலும் சிலருக்கு பித்தநீரில் பிலிரூபின் எனப்படும் பித்த துகள்கள் எனும் நிறமி கல்லீரலில் ஏற்படும் சில குறைபாடுகளால் அல்லது ரத்த குழாய்களில் ஏற்படும் சில தொற்று பாதிப்புகளால் இயல்பான அளவை விட கூடுதலாக பித்த துகள்களை உருவாக்கி அதனூடாக பித்தப்பையில் கற்களை ஏற்படுத்துகிறது. வேறு சிலருக்கு முழுமையாக இயங்க வேண்டிய பித்தப்பை சமச் சீரற்ற தன்மையில் இயங்குவதன் காரணமாக பித்தப்பையில் கற்கள் தேக்கமடைகிறது.  மேலும் நீரிழிவு நோய் காரணமாகவும், ஹோர்மோன் சுரப்பில் சமச் சீரற்ற தன்மை காரணமாகவும், உடற்பருமன் காரணமாகவும், பித்தப்பையில் கற்கள் உண்டாகிறது.

இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் கணைய பாதிப்பு, பித்தப்பை புற்றுநோய், கணைய புற்றுநோய் என பல்வேறு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நோயை உண்டாக்கி விடும். அதனால் பித்தப்பை கற்கள் ஏற்பட்டால் உடனடியாக அதற்குரிய நிவாரண சிகிச்சையை முழுமையாக பெற வேண்டும்.

இந்த தருணத்தில் மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால் வைத்தியர்கள் குருதி பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, எண்டாஸ்கோபிக் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, சிடி ஸ்கேன், ஹெச் ஐ டி ஏ ஸ்கேன், எம் ஆர் சி பி பரிசோதனை மற்றும் இ ஆர் சி பி பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பர். 

பரிசோதனையின் முடிவில் உங்களுடைய பித்தப்பையில் கற்கள் சிறிய அளவில் குறைவான எண்ணிக்கையில் இருந்தால் அதனை அகற்றுவதற்கும், அதனை துல்லியமாக கண்டறிவதற்கும் எண்டோஸ்கோபி ரெட்ரோகிரேட் சோலங்கியோபான்கிரிடோகிராபி( ERCP) எனும் சிகிச்சை முறையை பயன்படுத்தி முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.  இந்த சிகிச்சை முறையில் கமெரா பொருத்தப்பட்ட ஒரு மெல்லிய நெகிழ்வான குழாய் ஒன்றை எம்முடைய தொண்டை பகுதி வழியாக சிறு குடல் பகுதிக்கு செலுத்தப்படும்.‌ அதன் பிறகு பொருத்தப்பட்டிருக்கும் நெகிழ்வான மெல்லிய குழாய் வழியாக பிரத்யேக வண்ணக் கலவை ஒன்று செலுத்தப்பட்டு, பித்தப்பை கற்கள் துல்லியமாக கண்டறியப்படுகிறது. அதன் பிறகு அந்த குழாய் வழியாக அந்த கற்கள் அகற்றப்பட்டு, முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் சிலருக்கு பித்தப்பையில் கற்களின் அளவு அதிகமாகவும், அதிக எண்ணிக்கையில் இருந்தாலும். லேப்ராஸ்கோபிக் சத்திர சிகிச்சை மூலமே அகற்றி முழுமையான நிவாரணத்தை தருவர்.

வைத்தியர் முத்துக்குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45