நடிகர் பரத் வெளியிட்ட காளி வெங்கட்டின் 'தோனிமா' பட டீசர்

Published By: Digital Desk 7

18 Jun, 2024 | 05:16 PM
image

கதையின் நாயகனாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து தமிழ் திரையுலகின் சிறந்த பன்முக கலைஞராக திகழும் நடிகர் காளி வெங்கட் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'தோனிமா' எனும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் பரத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

'பக்ரீத்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தோனிமா' எனும் திரைப்படத்தில் காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், விசவ ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் ஷர்மா, பி. எல். தேனப்பன், 'கல்கி' ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாக்கியராஜ் மற்றும் சஜித் குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஈஜெ ஜான்சன் இசையமைத்திருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலின் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை எல் & டி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் வெங்கடேஸ்வரன் தயாரித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் நடிகர் காளி வெங்கட் துடுப்பாட்டத்தின் மீது தீவிர பற்றுதல் கொண்டவராகவும், அவரது மனைவி கூலி தொழிலாளியாகவும், இவர்கள் இருவரும் தங்களுடைய நிலையான முகவரிக்காக போராடுவதாகவும் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் படத்தை முதல் நாளன்று முதல் காட்சியிலேயே கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39
news-image

வெளியீட்டு திகதியை அறிவித்த விஜய் ஆண்டனியின்...

2024-07-11 18:06:45
news-image

சுசீந்திரன் இயக்கும் '2 K லவ்...

2024-07-11 18:06:33
news-image

அமீர் - சமுத்திரக்கனி தொடங்கி வைத்த...

2024-07-11 18:06:14
news-image

வெங்கட் பிரபு வழங்கும் 'நண்பன் ஒருவன்...

2024-07-11 18:06:00
news-image

யூரோ 2024 :16 வயதில் கோல்...

2024-07-11 12:47:35
news-image

விஜய் சேதுபதி - சூரி இணைந்து...

2024-07-10 17:26:26
news-image

ஆகஸ்டில் வெளியாகும் திரிஷாவின் முதல் இணைய...

2024-07-10 17:41:46
news-image

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்...

2024-07-10 17:25:00
news-image

இருட்டு அறையில் முரட்டு தேவதையாக மிரட்டும்...

2024-07-10 16:48:46