அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத துப்பாக்கி மூலம் விலங்குகளை வேட்டையாடி விற்பனை மோசடியில் ஈடுப்பட்ட நபர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வைத்திருப்பதாக வண்ணாத்திவில்லு பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று செவ்வாய்க்கிழமை (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வண்ணாத்திவில்லு கரடிப்புவல் பகுதியைச் சேர்ந்தவ 54 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் துப்பாக்கியை பயன்படுத்தி காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபரின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்த போது, கையில் துப்பாக்கியுடன் வீட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமுது சேனநாயக்கவின் பணிப்புரையின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் சேனக பண்டாரவின் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்களான வான் (70637) ராஜபக்ஷ, (73384) சமன், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் (76238) சேரசிங்க, (76232) சமீர ஆகியோர் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் புத்தலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM