மலையாள நடிகை ஹனி ரோஸ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ரேச்சல்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஆனந்தினி பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரேச்சல்' எனும் திரைப்படத்தில் ஹனி ரோஸ், பாபு ராஜ், 'கலாபவன்' ஷாஜோன், ரோஷன் பஷீர், ராதிகா ராதாகிருஷ்ணன், ஜோஜி, தினேஷ் பிரபாகர், வந்திதா மனோகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இஷான் ஷாப்ரா இசையமைத்திருக்கிறார். கிளாமர் வித் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாதுஷா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் என் எம் பாதுஷா, ராஜன் சிராயில் மற்றும் அப்ரீத் ஷைன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் நடிகை ஹனி ரோஸ் கவர்ச்சியாகவும், எக்சன் நாயகியாகவும் தோன்றுவதால் ரசிகர்களுக்கு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இதனிடையே நடிகை ஹனி ரோஸ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பின் தொடர்பவர்களை கொண்டிருப்பதால் வணிக நிறுவன திறப்பு விழா நாயகி என்றும், சமூக வலைதளங்களில் இவருடைய கவர்ச்சி படங்கள் வெளியாகி வருவது வாடிக்கை என்றும் குறிப்பிடப்படும் நடிகை ஹனி ரோஸ் - சிறிய இடைவெளிக்குப் பிறகு பான் இந்திய அளவில் தன்னுடைய கவர்ச்சியை நம்பி, கதையின் நாயகியாக எக்சன் அவதாரம் எடுத்திருக்கும் இந்த திரைப்படம் அவரது திரையுலக பயணத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என உறுதியாக நம்பி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM