சொல்லி அடிக்கும் பிரபாஸ் - தில்ஜித் கூட்டணி

Published By: Digital Desk 7

18 Jun, 2024 | 05:22 PM
image

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பொப் மற்றும் றாப் இசை பாடல்களில் பிரபலமாக இருப்பவர் வட இந்திய மாநில பஞ்சாப்பை சேர்ந்த தில்ஜித் தோசந்த்.

இவரது குரலுக்கும், நடனத்திற்கும் மயங்காத இசை ரசிகர்களே இல்லை என சொல்லலாம். இவர் 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கல்கி 2898 கி பி ' படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பதுடன்,  பிரபாசுடன் இணைந்து அந்தப் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.  'பைரவா ஆந்தம்' எனும் அந்தப் பாடல் இணையத்தில் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கு ம் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இம்மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'பைரவா ஆந்தம்' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த பாடலை பாடலாசிரியர் குமார் எழுத, பிரபல பாடகர் தில்ஜித் தோசந்த்  மற்றும் விஜய் நாராயணன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

இந்த பாடலுக்கான காணொளியில் .எதிர்காலத்தில் காசி எனும் நகரத்தின் இருள் சூழப்பட்ட பகுதியின் பின்னணியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. தில்ஜித் தோஷத்தின் மயக்கும் குரல் - மாயாஜாலம் காட்டும் நடனத்துடன் அமைந்த இந்தப் பாடலை ரசிகர்கள் ஆரவாரத்துடன் மீண்டும் மீண்டும் கண்டு ரசித்து வருகிறார்கள்.

ரசிகர்களின் விருப்பத்தையும், ரசனையையும் ஒன்றிணைத்து  பாடல்களை வழங்கி, பிரம்மாண்ட வெற்றிக்காக சொல்லி அடிக்கும் பிரபாஸ் - தில்ஜித் கூட்டணியை திரையுலக வணிகர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39
news-image

வெளியீட்டு திகதியை அறிவித்த விஜய் ஆண்டனியின்...

2024-07-11 18:06:45
news-image

சுசீந்திரன் இயக்கும் '2 K லவ்...

2024-07-11 18:06:33
news-image

அமீர் - சமுத்திரக்கனி தொடங்கி வைத்த...

2024-07-11 18:06:14
news-image

வெங்கட் பிரபு வழங்கும் 'நண்பன் ஒருவன்...

2024-07-11 18:06:00
news-image

யூரோ 2024 :16 வயதில் கோல்...

2024-07-11 12:47:35
news-image

விஜய் சேதுபதி - சூரி இணைந்து...

2024-07-10 17:26:26
news-image

ஆகஸ்டில் வெளியாகும் திரிஷாவின் முதல் இணைய...

2024-07-10 17:41:46
news-image

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்...

2024-07-10 17:25:00
news-image

இருட்டு அறையில் முரட்டு தேவதையாக மிரட்டும்...

2024-07-10 16:48:46