வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு - வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவிற்கான தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (17) இரவு பாரம்பரிய மரபுவழியில் சிறப்பாக இடம்பெற்றது.
குறிப்பாக கடந்த திங்கட் கிழமை மாலை தீர்த்தம் எடுப்பதற்கான மரபுவழிச் சடங்குகள் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அடியவர்கள் கும்பம், மடைப்பட்டங்கள், தீர்த்தக்குடம் சகிதம், தீர்த்தமெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய பாதையூடாக வட்டுவாகல் கடற்கரையை வந்தடைந்தனர்.
வட்டுவாகல் கடற்கரையில் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருடாந்தப் பொங்கலுக்கான புனித தீர்த்தம் வட்டுவாகல் கடலில் எடுக்கப்பட்டது.
அதனையடுத்து புனித தீர்த்தம் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு பாதுகாப்பாக ஆலயவளாகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு எடுத்துவரப்பட்ட கடல் தீர்த்தத்தில் வட்டுவாகல் சப்தகன்னி அன்னையர்க்கு தீபமேற்றப்படுகின்றது.
இவ்வாறு எடுத்துவரப்பட்ட புனித கடல் தீர்த்தத்தினைப் பயன்படுத்தி கோவிலில் ஒருவாரத்திற்கு தொடர்ச்சியாக தீபம் ஏற்றப்படுவதுடன், எதிர்வரும் 24ஆம்திகதி திங்கட்கிழமையன்று, குறித்த வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM