(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் பாவத்தின் பங்காளியாக ஜனாதிபதியாக செயற்படுகிறார்.
பொதுஜன பெரமுனவின் தவறை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் இவர் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
கொவிட் பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து ஜனாதிபதி பேசியிருந்தார். துறைசார் நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமையவே உடல்கள் தகனம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
கொவிட் பெருந்தொற்றுத் தாக்கத்தில் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம், சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய நல்லடக்கம் செய்யுங்கள் என்று அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் பலமுறை வலியுறுத்தினோம்.
இவ்விடயம் குறித்து ஆராய்வதற்கு தொழில்நுட்ப குழுவும், துறைசார் நிபுணர்களின் குழுவும் நியமிக்கப்பட்டது. தொழில்நுட்ப குழுவில் தலைவராக கோட்டாவுக்கு நெருக்கமான சன்ன பெரேரா என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த குழுக்களின் மீது நம்பிக்கை இல்லை ஆகவே துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை நியமியுங்கள் என்று அப்போதைய ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இதற்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடாதிபதி ஜெனிபா பெரேரா தலைமையில் துறைசார் குழு நியமிக்கப்பட்டது.
சர்வதேச சுகாதார தாபனம் முன்வைத்துள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய உடல்களை அடக்கம் செய்யலாம் என்று இந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் கோட்டபய ராஜபக்ஷவும், அவரது அமைச்சரவையும் கவனத்திற் கொள்ளவில்லை. இனவாத ரீதியில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கினார்.
உலக சுகாதார தாபனம் சமர்ப்பித்த அறிவுறுத்தல்களை புறக்கணித்து முஸ்லிம் சமூகத்தினர் பழிவாங்கப்பட்டார்கள். தற்போது ஜனாதிபதி தொழில்நுட்ப குழுவின் தீர்மானம் என்று குறிப்பிட்டு பொதுஜன பெரமுனவை தூய்மைப்படுத்த முயற்சிக்கிறார். பொதுஜன பெரமுனவின் ஆதரவில் இருப்பதால் இவரும் பாவத்தில் பங்காளியாகியுள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM