இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது 'புஷ்பா 2'

Published By: Digital Desk 7

18 Jun, 2024 | 03:04 PM
image

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அல்லு அர்ஜுனனின் 'புஷ்பா 2' திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆறாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'புஷ்பா 2 -தி ரூல்' எனும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் தற்போது புதிய வெளியீட்டு திகதியை அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆறாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

தாமதம் குறித்து படக்குழுவினர் விளக்கமளிக்கையில், '' ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்யும் நாங்கள் அதற்காக தரத்தில் எந்தவித சமரசத்தையும் செய்து கொள்ள விரும்பவில்லை. வி எஃப் எக்ஸ் காட்சிகளில் நேர்த்தியையும் துல்லியத்தையும்  திரையில் காண்பிப்பதற்காக தான் இந்த தாமதம்'' என தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே புஷ்பா படத்தின் முதல் பாகம் 2021ஆம்‌ ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியானது. வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதனால் சென்டிமென்ட்டின் படி 'புஷ்பா 2' படத்தையும் படக் குழுவினர் டிசம்பரில் வெளியிடுகிறார்கள் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39
news-image

வெளியீட்டு திகதியை அறிவித்த விஜய் ஆண்டனியின்...

2024-07-11 18:06:45
news-image

சுசீந்திரன் இயக்கும் '2 K லவ்...

2024-07-11 18:06:33
news-image

அமீர் - சமுத்திரக்கனி தொடங்கி வைத்த...

2024-07-11 18:06:14
news-image

வெங்கட் பிரபு வழங்கும் 'நண்பன் ஒருவன்...

2024-07-11 18:06:00
news-image

யூரோ 2024 :16 வயதில் கோல்...

2024-07-11 12:47:35
news-image

விஜய் சேதுபதி - சூரி இணைந்து...

2024-07-10 17:26:26
news-image

ஆகஸ்டில் வெளியாகும் திரிஷாவின் முதல் இணைய...

2024-07-10 17:41:46
news-image

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்...

2024-07-10 17:25:00
news-image

இருட்டு அறையில் முரட்டு தேவதையாக மிரட்டும்...

2024-07-10 16:48:46