(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் மகிழ்ச்சியடையவில்லை.ஆகவே இந்த தீர்ப்பு குறித்து பாராளுமன்றத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட நிலைப்பாடா அல்லது அமைச்சரவையின் நிலைப்பாடா? நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது தவறானதொரு எடுத்துக்காட்டாகும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சட்டத்துறை, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை உள்ளிட்ட மூன்று துறைகளின் அதிகாரங்களும் வேறுப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு துறையின் அதிகாரத்தில் பிறிதொரு துறை தலையிட கூடாது என்பது அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கும் வியாக்கியானத்தை பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள கூடாது என்று பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள வியாக்கியானம் குறித்து மகிழ்ச்சியடைய போவதில்லை.பாராளுமன்றத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடா?அல்லது அமைச்சரவையின் நிலைப்பாடா? உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது தவறானதொரு எடுத்துக்காட்டாகும்.
இலங்கை பௌத்த நாடு அரசியலமைப்பில் ஆண் -பெண் என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளும் காண்பிக்கப்படவில்லை.சட்டத்தின் ஊடாக ஆண்,பெண் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள்.அதேபோல் பௌத்த மத கோட்பாடுகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆண் மற்றும் பெண் பாலினத்துக்கு அப்பாற்பட்டு மூன்றாம் பாலின தரப்பினரது செயற்பாடு உலகளாவிய ரீதியில் எவ்வாறு காணப்படுகிறது என்பதை உலக நடப்பு அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.மேற்குலக கலாசாரத்தை பின்பற்றினால் இலங்கைக்கே உரித்தான சுதேச கலாச்சாரம் இல்லாதொழியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM