அறிமுக நாயகன் விஷ்வந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ராக்கெட் டிரைவர்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ராக்கெட் டிரைவர்' எனும் திரைப்படத்தில் விஷ்வந்த், நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தான் செய்த தவறுகளால் தனது வாழ்க்கையில் ஏமாற்றம் கிடைத்தது என தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு, புலம்பி வரும் ஓட்டோ சாரதி ஒருவர்... 'உலகையே மாற்றிக் காட்ட வேண்டும்' என கனவு காண்கிறார்.
அவரால் கனவு மட்டுமே காண முடிகிறது. இந்நிலையில் தனது ரோல் மாடலான ஒருவரை பதின்ம பருவத்தில் காண்கிறார். அந்தத் தருணத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று அரங்கேறுகிறது. அது விபரீதத்தில் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் யூகிக்க முடியாத சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை'' என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு வருவதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM