''விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை'' என தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதியன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக- பாமக -நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகிறது. இந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளரானன புஸ்ஸி ஆனந்த் விக்கிரவாண்டி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
''தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வெளியிட்ட கட்சி தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
கழகத் தலைவர் அவர்கள் விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்களை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழக முழுவதும் மக்கள் சந்திப்பு பயணங்கள் என்று. வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்
எனவே அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்த தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக வருகிற ஜூலை 10 ஆம் திகதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் , எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் பாமக இடையே நேரடி போட்டி உருவாகி இருக்கிறது என்றும், இந்த தேர்தலில் பாமக வெற்றி பெறவில்லை என்றாலும்.. அதீத வாக்கு சதவீதத்தை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்தை உறுதிப்படுத்திக் கொள்வற்காக தீவிரமாக களப்பணியில் ஈடுபடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM