வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி

Published By: Digital Desk 3

18 Jun, 2024 | 02:20 PM
image

''வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்': என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார்.

நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் ரேபரேலி அல்லது வயநாடு எந்த தொகுதியை ராஜினாமா செய்வார் என்ற வினா எழுந்தது.

இந்நிலையில் புது தில்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது,

ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியின் மக்களவை உறுப்பினராக தொடர்கிறார். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ராகுல் காந்தி மக்களின் அன்பை பெற்றார். எனவே அந்தத் தொகுதியில் பிரியங்கா காந்தியை போட்டியிட செய்வது என தீர்மானித்திருக்கிறோம்'' என்றார்.

இது தொடர்பாக பிரியங்கா காந்தி பேசுகையில், '' ரேபரேலியுடன் எனக்கு மிகவும் நீண்ட உறவு உள்ளது. அதை எதனாலும் உடைக்க இயலாது. நானும் , சகோதரர் ராகுலும் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டிலும் மக்களுடன் இணைந்து நிற்போம். '' என்றார்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர்...

2024-07-14 12:33:50
news-image

டிரம்ப் மீது துப்பாக்கிபிரயோகம் ஒரு கொலை...

2024-07-14 10:57:38
news-image

தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப்மீது துப்பாக்கி...

2024-07-14 07:31:23
news-image

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் :...

2024-07-14 06:57:37
news-image

அங்­கோலா முன்னாள் ஜனா­தி­ப­தியின் மக­னுக்கு ஊழல்...

2024-07-14 09:55:12
news-image

பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐ.அ. இராச்­சி­யத்தில்...

2024-07-13 17:16:55
news-image

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில்...

2024-07-13 16:55:46
news-image

இந்தியாவில்13 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு...

2024-07-13 12:39:59
news-image

பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் 'பிம்ஸ்டெக்'கின்...

2024-07-13 10:54:13
news-image

மொஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 3...

2024-07-13 10:12:04
news-image

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்...

2024-07-12 15:06:27
news-image

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான...

2024-07-12 12:28:03