தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரல்

Published By: Digital Desk 3

18 Jun, 2024 | 01:04 PM
image

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 155அ எனும் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறாக, பாராளுமன்ற உறுப்பினராக, மகாண சபை உறுப்பினராக, உள்ளூராட்சி அதிகாரசபை  உறுப்பினராக இருக்கும் எவரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தகைமையுடையோராக இருக்கமாட்டார்கள்.

மேலும், ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பதாக, அரச சேவையில் அரச உத்தியோகத்தராக அல்லது நீதித்துறை உத்தியோகத்தராக இருந்த எவரும் அவரின் நியமனத்திற்கு முன்பதாக, அவ்வாறான நியமனம் செயலூக்கம் பெறுகையில், அவ்வாறான பதவிகளில் இருந்து நீங்க வேண்டும் என்பதுடன் அரச உத்தியோகத்தராக அல்லது நீதித்துறை உத்தியோகத்தராக மேலும் நியமிக்கப்படுவதற்கு தகுதியற்றவராவர்.

அதற்கமைய, www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான (தேபொஆ) உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்படல் வேண்டும்.

முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2024 யூலை 01 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில், 'அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப்  பேரவை - அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே.' எனும் முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

இணைப்பு: https://www.parliament.lk/ta/secretariat/advertisements/view/306 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05