67 பேருடன் பறந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய விமானத்தில் தீ : நியூசிலாந்தில் அசவசரமாக தரையிறக்கம்

Published By: Digital Desk 3

18 Jun, 2024 | 01:15 PM
image

அவுஸ்திரேலிய நாட்டுக்கு சொந்தமான வெர்ஜின் அவுஸ்திரேலிய விமானம் ஒன்று புறப்பட்டு சிறிது நேரத்தில் அதன் இயந்திரம் தீப்பிடித்ததையடுத்து நியூசிலாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

போயிங் 737-800 என்ற வெர்ஜின் அவுஸ்திரேலிய விமானம் திங்கட்கிழமை (17) மாலை நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரத்தில் இருந்து மெல்போர்ண் நோக்கி புறப்பட்டது.

இந்நிலையில், விமானத்தின் இயந்திரம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக குயின்ஸ்டவுனுக்கு தெற்கே 150 கிலோ மீற்றர்  தொலைவில் உள்ள  இன்வர்கார்கில் நகரத்திலுள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உட்பட 67 பேர் இருந்துள்ளனர். 

இயந்திரம் ஒன்றில் இருந்து தீப்பிழம்புகள் வருவதைக் கண்டதாகவும், பலத்த சத்தம் கேட்டதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

விமான இயந்திரத்தில் பறவை ஒன்று சிக்கியமையே தீப்பிடிக்க காரணம் என குயின்ஸ்டவுன் விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி க்ளென் சோவ்ரி தெரிவித்துள்ளார்.

ஒரு இயந்திரத்தை மட்டும் பயன்படுத்தி இயங்குவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏற்ற வகையில் விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்தின் விமான நிலையங்களில் ஒவ்வொரு 10,000 விமானங்களின் பயணங்களின் போது 4 விமானங்கள் பறவைகளால் தாக்கப்படுவதாக அந்த நாட்டின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் உயிர்தப்பியமை குறித்து நிம்மதி வெளியிட்டார்...

2024-07-14 13:00:41
news-image

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர்...

2024-07-14 12:33:50
news-image

டிரம்ப் மீது துப்பாக்கிபிரயோகம் ஒரு கொலை...

2024-07-14 10:57:38
news-image

தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப்மீது துப்பாக்கி...

2024-07-14 07:31:23
news-image

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் :...

2024-07-14 06:57:37
news-image

அங்­கோலா முன்னாள் ஜனா­தி­ப­தியின் மக­னுக்கு ஊழல்...

2024-07-14 09:55:12
news-image

பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐ.அ. இராச்­சி­யத்தில்...

2024-07-13 17:16:55
news-image

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில்...

2024-07-13 16:55:46
news-image

இந்தியாவில்13 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு...

2024-07-13 12:39:59
news-image

பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் 'பிம்ஸ்டெக்'கின்...

2024-07-13 10:54:13
news-image

மொஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 3...

2024-07-13 10:12:04
news-image

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்...

2024-07-12 15:06:27