ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 24 வருடங்களிற்கு பின்னர் வடகொரியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்;ந்த விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இன்று வடகொரியா செல்லவுள்ள புட்டின் கிம் ஜொங் அன்னை சந்திப்பார்.
இதேவேளை உக்ரைனிற்கு எதிரான ரஸ்யாவின் யுத்தத்திற்கு உறுதியான ஆதரரவ வழங்குவதற்காக வடகொரியாவிற்கு புட்டின் நன்றி தெரிவித்துள்ளார்.
வடகொரிய அரச ஊடகத்தில் வெளியாகியுள்ள கடிதத்தில் புட்டின் இதனை தெரிவித்துள்ளார்.
மேற்குநாடுகளால் கட்டுப்படுத்தப்படாத பொருளாதார பாதுகாப்பு முறையை வடகொரியாவுடன் இணைந்து உருவாக்குவேன் என புட்டின் உறுதி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் இராணுவ அச்சுறுத்தல்கள் போன்றவற்றிற்கு மத்தியில் தனது நலனை பாதுகாப்பதற்காக வடகொரியா மேற்கொள்ளும் முயற்சிகளை புட்டின் பாராட்டியுள்ளார்.
நீதிக்கான பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் பன்முனைப்படுத்தப்பட்ட உலக ஒழுங்கைஸ்தாபிப்பதை தடுக்கும் மேற்கத்தைய இலட்சியங்களை ரஸ்யாவும் புட்டின் உறுதியாக எதிர்க்கும் என புட்டின் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM